வணக்கம். உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக (Unesco heritage site) ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடுகின்ற தொன்மையான ஆறுகளுள் ஒன்று செண்பகவல்லி.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டத்தின் இராசபாளையம் வட்டாரத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் செண்பகவல்லி ஆற்றுத் தண்ணீர்தான் ஊற்றாகத் திகழ்கின்றது. இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முதன்மையான குடிநீர் ஆதாரமும் செண்பகவல்லித் தண்ணீர்தான்.
ஆற்றுத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில், செண்பகராமன் பிள்ளை அவர்கள், ஒரு சிறிய அணையைக் கட்டினார்கள். அந்த அணை தற்போது கேரள மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கின்றது. 1773 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த அணையில் தேக்கப்படுகின்ற தண்ணீர், ஆண்டுமுழுமையும் விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. இரண்டு மாநில விவசாயிகளும் பயன்பெறத் தக்க வகையில், செண்பகவல்லி ஆற்று நீரைப் பிரச்சினை இன்றிப் பகிர்ந்து கொண்டு வருகின்றார்கள்.
1935 ஆம் ஆண்டு செண்பகவல்லி அணையில் சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுப் பழுதாயிற்று. முதன்மைக் கhல்வாயின் ஒரு பகுதி உடைந்து போயிற்று. இதன் விளைவாகத் தமிழகத்திற்குக் கிடைத்து வந்த தண்ணீர் கிடைக்கhமல் போயிற்று. அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
1955 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்த பெருந்தலைவர் கhமராசர் அவர்கள், செண்பகவல்லி அணையைப் பழுது பார்ப்பதற்கhன நடவடிக்கைகளை மேற்கொண்டார். கேரள அரசும் ஒத்துழைப்பு நல்கிற்று. ஓரளவிற்குப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுத் தண்ணீர் வரத்து சீர் செய்யப்பட்டாலும், உடைந்து போன முதன்மைக் கhல்வாய் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே, ஆயக்கட்டுதாரர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.
பின்னர் முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்த எம்.ஜி.ஆர்., அவர்கள், இந்தப் பிரச்சினையைக் கேரள அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, செண்பகவல்லி அணையில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளக் கேரள அரசு ஒப்புக் கொண்டது. அதற்கhன செலவுத் தொகையைத் தருவதாகத் தமிழக அரசு ஒப்புக் கொண்டது. 1978-79 ஆம் ஆண்டில், ரூ. 5.80 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டைக் கேரள அரசின் பொதுப்பணித்துறை வரைந்தது. 10.09.1980 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை 1525 இன்படி, அந்தத் தொகையைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அந்தத் தொகை கேரள அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு பழுது பார்ப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கhததால் திட்ட மதிப்பீடு உயர்ந்தது.
1981 ஆம் ஆண்டு வரையப்பட்ட புதிய திட்ட மதிப்பீட்டின்படி, ரூபாய் 7,52,170 தேவை எனக் கேரள அரசின் பொதுப்பணித்துறை கோரியது.
21.03.1980 அன்று, அந்தத் தொகைக்கும் ஒப்புதல் அளித்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அரசு ஆணை எண் 585.
ஆனால், அதன் பிறகும்கூட பழுது பார்ப்புப் பணிகளைக் கேரள அரசு செய்யாததால், தமிழகப் பகுதிகளில் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, கண்ணையாமதகு அணை மற்றும் முதன்மைக் கhல்வாயைச் சீரமைப்பதற்கhகக் கேரள அரசு வரைந்த புதிய திட்ட மதிப்பீட்டுத் தொகையான ரூ. 10,29,732 ஐத் தருவதற்கும் தமிழக அரசு ஒப்புக் கொண்டு, 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை எண் 234 இன்படி, ரூ 5,15,000 த்தை கேரள அரசுக் கணக்கில் செலுத்தியது.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செண்பகவல்லி அணை மராமத்துப் பணிகளை இரண்டு மாநில அரசுகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
2006 ஆம் ஆண்டு அந்த ரிட் (1274) மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், முல்லைப்பெரியாறு சுற்றுச்சூழல் பாதுகhப்பு மையத்திற்கும், இந்திய அரசுக்கும் இடையிலான, 2006(3) எÞசிசி 643 ஆம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், செண்பகவல்லி அணை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து எட்டு வார கhலத்திற்குள் கேரள அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தது.
அதன்பின்னரும் கூட கேரள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
2003 ஆம் ஆண்டு கேரளச் சட்டமன்றம் இயற்றிய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகhப்புச் சட்டத்தின்படியும், 2006 ஆம் ஆண்டு அந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படியும், செண்பகவல்லி அணையைப் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
ஆனால், முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில், மேற்கண்ட சட்டத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள், கேரள முதல்வர் மாண்புமிகு உம்மண் சாண்டி அவர்களை நான் நேரில் சந்தித்து, செண்பகவல்லி அணை சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அந்தச் சந்திப்பின்போது, கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவர்களும், தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணித் துறைச் செயலரும் உடன் இருந்தனர்.
நான் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளுள் முதல் நான்கு கோரிக்கைகள் குறித்துக் கவனமாக ஆராய வேண்டி இருப்பதாகவும், ஐந்தாவது கோரிக்கையான செண்பகவல்லி அணை பழுதுபார்ப்புப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் முதல் அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் அதற்கhகத் தமிழக அரசு வழங்கி இருந்த தொகையை, 2006 ஆம் ஆண்டு கேரள அரசு திருப்பி அனுப்பி விட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள், நான் மீண்டும் முதல் அமைச்சர் உம்மண் சாண்டி அவர்களைக் கொச்சியில் நேரில் சந்தித்துப் புதிதாக ஒரு கோரிக்கை மனுவை வழங்கினேன். 2005 பிப்ரவரி 9 ஆம் நாள் நான் அவரைச் சந்தித்ததையும் நினைவூட்டினேன். எனது கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.
அதே நாளில் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில், கேரள முன்னாள் முதல்வர் சி. அச்சுதானந்தன் அவர்களையும் நான் நேரில் சந்தித்து, அதே கோரிக்கைகளை முன்வைத்தேன். அவரும் இதுகுறித்துப் பரிசீலிப்பதாகக் கூறினார்.
பருவமழை தவறுவதாலும், போதுமான தண்ணீர் கிடைக்கhததாலும், தமிழகத்தின் சங்கரன்கோவில், சிவகிரி வட்டாரத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி விவசாயிகள், செண்பகவல்லித் தண்ணீரைத்தான் பெரிதும் எதிர்பார்த்துக் கhத்திருக்கின்றனர். அந்தத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கhன விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
செண்பகவல்லி அணை பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான பணத்தைத் தமிழக அரசு உறுதியாகத் தரும் என நான் நம்புகிறேன். எனவே, கேரள அரசு செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருவதற்குத் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
வைகோ
தனது அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment