மணப்பாறையில் 25-03-20017 முதல் திருச்சி, திருநெல்வேலி செல்லும் இண்டர்சிட்டி ரயில் நின்று செல்கிறது.
இந்த ரயில் நிற்பதற்கு உத்தரவிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களுக்கும், பரிந்துரை செய்த தலைவர் வைகோ அவர்களுக்கும் நனறி தெரிவித்து மணப்பாறை நகர் முழுவதும் பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மறுமலர்ச்சி திமுக சார்பில் தாரை தப்பு முழங்க, அதிர்வேட்டு வெடிக்க, ரயில் பயணிகள், ஒட்டுநர், நிலைய அலுவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆரவார வரவேற்பு வழங்கப்பட்டது.
மதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராசு..நகரச் செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி மற்றும் திரளானோர் இண்டர்சிட்டி ரயிலை வரவேற்றனர் என மதிமுக மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தனது செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment