தலைவர் வைகோ அவர்களுடைய தம்பி வை.ரவிச்சந்திரன் அவர்களின் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரி / பிரீத்தி திருமணம் இன்று 16-03-2017 காலையில், கலிங்கப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வையாபுரி மாரியம்மாள் அரங்கில் சிறப்பாக நிகழ்ந்தேறியது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
மணவிழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த பெருமக்கள்:-
1. ராம்ஜெத்மலானி
2. யஷ்வந்த் சின்கா
3.பேராசிரியர் இராமசாமி (பினாங்கு மாநிலத் துணை முதல்வர்)
4. நடிகர் சிவகுமார்
5. ஏ.சி.முத்தையா
6. கருமுத்து கண்ணன் (மதுரை தியாகராயர் கல்லூரி)
7. இரா. கண்ணன் ஆதித்தனார் (மாலை முரசு)
8. வி.ஜி. சந்தோசம்
9. ஜி.விஸ்வநாதன் (விஐடி வேலூர்)
10. தமிழருவி மணியன்
11. பழநி ஜி. பெரியசாமி
12. முத்துராமலிங்கம்(வேலம்மாள் கல்விக்குழுமம்)
13. தினமணி வைத்தியநாதன்
14. தமிழக அரசியல் சுந்தர்ராஜன்
15.சிதார் சுப்புராஜ்
16. அலெக்சாண்டர் (முன்னாள் டிஜிபி)
17. கண்ணப்பன் (உளவுத்துறை முன்னாள்ஐஜி)
திருநெல்வேலி மாவட்டஆட்சியர் மு.கருணாகரன், தமிழ்நாடு உள்ளாட்சி குறைதீர் மன்ற நடுவர் சோ.அய்யர் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, காவல்துறை தென் மண்டல ஐஜி முருகன் மூத்த வழக்குரைஞர் மாசிலாமணி ஆகியோர் நேற்று மாலை வருகை தந்தனர்.
தொழில் அதிபர்கள், மருத்துவர்கள். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்பலர் வருகை தந்தனர்.
கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 11 கிராமத்து மக்களும் தங்களது குடும்ப விழாவாகக் கருதி பெருமளவில் திரண்டு வந்து சிறப்பித்தனர்.
தமிழகம் முழுமையும்இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் வருகை தந்தார்கள்.
வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் தலைவர் வைகோ அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment