மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (08.03.2017) காலை இராமேஸ்வரம் சென்றார். சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு உடலுக்கு மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தங்கச்சிமடத்துக்குச் சென்று, அங்கே திரண்டு இருந்த மக்களிடம் பிரிட்ஜோ மறைவுக்கு இரங்கல் உரை ஆற்றினார்.
மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர் மு. பூமிநாதன், இராமநாதபுரம் குணா, நெல்லை மாநகர் நிஜாம், மதுரை புறநகர் தெற்கு வழக்கறிஞர் கதிரேசன், மதுரை புறநகர் வடக்கு எம்.மார்நாடு, கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி, மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பேட்ரிக் ஆகியோர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment