Friday, March 24, 2017

ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம்!

ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் நிகழ்வு 24-03-2017 வெள்ளிகிழமை மாலை 3.30 மணி அளவில், ஓமன் தலைநகர், மஸ்கட் ருசைல் பார்க்கில், [மஜான் ஹோட்டல் அருகில்) நடந்தது.

குமரி மாவட்ட தொண்டர்படை தளபதி, வளன் ஆல்பின் வரவேற்றார். மறுமலர்ச்சி மைக்கேல் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் ஓமன் இணையதள அணி பங்களிப்பு, மற்றும் ஓமன் இணையதள அணி நலன் சார்ந்த சில முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இணையதள அணி உறுப்பினர்களுக்கு, வாழ் நாள் உறுப்பினர் அட்டையின் தனித்தன்மையான அடையாளம், சங்கொலி பயன், புரவலர் சந்தா பற்றியும் விளக்கப்பட்டது. அப்போது பலர் அதை ஏற்றுக்கொண்டு புரவலராகவும், வாழ்நாள் உறுப்பினராகவும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

ஏற்கனவே கழக வாழ்நாள் உறுப்பினர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு இன்று நேரில் வழங்கப்பட்டது. மேலும் வர இயலாதவர்களுக்கு அந்தந்த பகுதி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களிடம் கொடுத்து கையளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்நாள் உறுப்பினர் அட்டை விண்ணப்பித்தவர்கள் விபரம்:-
எல்லப்பன், முருகராஜ், நவநீத கிருஷ்ணன், ராஜாராம், சரவணன்.

5 வருட சங்கொலி சந்தா செலுத்தியவர்கள்:-
கிருஷ்ணகுமார்
எல்லப்பன்

புரவலர் சந்தா விபரம்:-
விஸ்வநாதன் - இரண்டு புரவலர் சந்தா
சுலைமான் மாஹின் - இரண்டு புரவலர் சந்தா
ராதாகிருஷ்ணன் - ஒரு புரவலர் சந்தா

ஓமன் இணையதள அணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, பகுதிகள் வாரியாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், அந்தந்த பகுதி இணையதள அணி உறுப்பினர்களை, கழகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைத்து சிறப்பாக கழக பணியாற்றிட ஓமன் இணையதள அணி வாழ்த்துகிறது.

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள்:-
மஸ்கட் - விஸ்வநாதன், ராஜகுரு
இப்ரா - பிரேம் ஜாஸ்பர்
சோஹார் - நவநீத கிருஷ்ணன்

ஓமன் இணையதள அணியின் ஒருங்கிணைப்பாளராக மறுமலர்ச்சி மைக்கேல்தொடரவும், கலந்துகொண்ட அனைத்து ஓமன் இணையதள அணி உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை, விஸ்வநாதன் முன் மொழிய, குளச்சல் நகர முன்னாள் இளைஞரணி செயலாளர் சுலைமான் மாஹீன் வழி மொழிய, உறுப்பினர்கள் ஆதரவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேறியது.

தீர்மானம்:-
1. நிலத்தடி நீரை உறுஞ்சி, வருங்கால சந்ததியினரை அழிக்க நினைக்கும் சீமைகருவேலம்மரத்தை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேரோடு அழிக்க வாதாடி தீர்ப்புபெற்று தந்ததுடன், கருவேலம் மரங்களை அகற்ற தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் தனி சட்டம்இயற்ற வேண்டுமென தீர்ப்பை பெற்று தந்த பசுமை நாயகன் வைகோ அவர்களுக்கு ஓமன்இணையதள அணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

2. புதிதாக பொறுப்பேற்றுள்ள கழக பொருளாளர், துணை பொதுச் செயலாளர், உயர்நிலைகுழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், கழகத்தை முன்னேற்ற பாதையில் நகர்த்தி செல்லவலியுறுத்துவதுடன், கழகப்பணி சிறக்கவும் ஓமன் இணையதள அணி வாழ்த்துகிறது.

3. கலிங்கப்பட்டி மதுக்கடை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பஞ்சாயத்து தீர்மானத்தைஎதிர்த்து, ஜெயலலிதா இறந்த பின் பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த சமயத்தில்,தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தமிழக அரசு மனுவை தள்ளுபடிசெய்து கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தீர்மானத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு, கிராமபஞ்சாயத்திற்கும் மதுக்கடைகளை மூட அதிகாரம் உண்டு என உலகிற்குதெளிவுபடுத்தியிருக்கிறது. எனவே இந்த போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள்கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், உணர்வோடு போராடிமதுக்கடையை அடைக்க பாடுபட்ட கலிங்கப்பட்டி ஊர் மக்களுக்கு பாராட்டுக்களையும்,வாழ்த்துதலையும் ஓமன் இணையதள அணி தெரிவித்துக்கொள்கிறது.

4. 2017 பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மதிமுக பொதுக்குழு தீர்மானத்தின்படி, வருகிறஊராட்சி மன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடுவதால், அந்தந்த பகுதியை சார்ந்த மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகிக்க, ஊரில் களத்தில் இருக்கும்நண்பர்கள் மூலம் ஏற்ப்பாடு செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

5. நவம்பர் 6 ஆம் தேதி திறக்க போகும் மது ஒழிப்பு போராளி அன்னை மாரியம்மாள் வெண்கல சிலை அமைப்புக்கு ஓமன் இணையதள அணி சார்பில்10000 நிதியளிக்கவும் ஓமன் இணையதள அணி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் ஓமன் இணையதள அணி உறுப்பினர் கணேசன் அவர்கள், மிக தொலைவில் இருந்து வர முடியாத காரணத்தால், அலைபேசி வாயிலாக சிறு உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்தினார். கலிங்கப்பட்டி இராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்ற நிகழ்வுகள் முடித்துவைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட இணையதள அணி உறுப்பினர்கள் விபரம் வருமாறு:-
1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. எல்லப்பன்
3. ராஜன்
4. ஆஸ்டின்
5. ரா.விஸ்வநாதன்
6. இராதாகிருஷ்ணன்
7. S.நவநீதகிருஷ்ணன்
8. V.செல்வகுமார்
9. R.கேசவன்
10. P.சரவணன்
11. வ.வெங்கடாசலபதி
12. வே.முருகராஜ்
13. CV.ராஜாராம்
14. S.மாஹீன்
15. M.வளன் ஆல்பின்
16. J.பிரேம் ஜாஸ்பர்
17. R.கிருஷ்ணகுமார்


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment