புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பகுதி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் வடகாடு நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன், சேல் ஆயில், சேல் கேஸ் ஆகியவற்றை எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், வடகாடு நெடுவாசல் பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண்மைப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் சார்பில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள் ஆஜராகி வாதாடுவார் என
மறுமலர்ச்சி தி.மு.க., தலைமைக் கழகம் ‘தாயகம்’ சென்னை இன்று 6.03.2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment