மணப்பாறையில் அனைத்து அரசியல் இயக்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து 23.08.2012 அன்று மாபெரும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று திருச்சி வந்த மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு சுரேஷ் பிரபு அவர்கள் தங்கியிருந்த சங்கம் விடுதியில் சந்தித்து மணப்பாறை மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை மனுவை அளித்தோம். உடன் இருந்த பாஜக தேசியச் செயலாளர் இராஜா அவர்களிடம் வைகோ தமிழகத்தின் தலைசிறந்த தலைவர். என் இனிய நண்பர். அவரை தொலைபேசியில் பேசச் சொல்லுங்கள் என்றார். உடனடியாக தலைவர் வைகோ அவர்களிடம் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
என் நண்பர் வைகோ அவர்களே! உங்களிடம் பேச நான்தான் தொலைபேசி இணைப்பு தரச்சொன்னேன். நீங்கள் தமிழகத்தின் முக்கியமான தலைவர். உங்களைப் பார்க்க வேண்டும். டெல்லி வரும்போது எங்கள் இல்லம் வந்து எங்களோடு விருந்துண்ண வேண்டும்.
அப்போது தலைவர் வைகோ அவர்கள், எங்கள் கட்சியினர் தந்துள்ள கோரிக்கை மனுவை ஏற்று, மணப்பாறையில் இண்டர்சிட்டி ரயில் ஓரிரு நிமிடங்கள் நின்று செல்ல ஆவணசெய்ய வேண்டும் என்றார்.
அதற்கு இக்கோரிக்கைக்கு ஒரு சில நாட்களில் உத்தரவிடுகிறேன் மகிழ்ச்சிதானே என்றார். உடனடியாக துறைச் செயலாளரை அழைத்து நமது கோரிக்கை மனுவைத் தந்து விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்றார். நான் இதைப்பதிவிடுகிற இந்த நேரத்திலேயே சோதனை அடிப்படையில் மூன்று மாதத்திற்கு மணப்பாறையில் இண்டர்சிட்டி ரயில் நிற்கும் என திருச்சி பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், அருகில் இருந்த தமது மகனிடமும் தொலைபேசியைத் தந்து என் நண்பர் வைகோ பேசுகிறார். பேசு, மிக நல்லவர் என்றார். தலைவர் வைகோ அவர்களும் உங்கள் தந்தை நேர்மையாளர். அவரைப் போல நீங்களும் வளர வேண்டும் என்றார்.
மத்திய ரயில்வே அமைச்சர் மணப்பாறையில் ரயில் நிற்க உத்தரவிடப்போகிறார். மணப்பாறை மக்களுக்கு எனது வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் என்றார்.
தமக்காக வாழாது தமிழ் மண்ணுக்காக வாழும் தலைவர் வைகோவின் ஆளுமையை மத்திய அமைச்சர் விவரித்தபோது மகிழ்ந்தோம். மணப்பாறை மக்களின் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சருக்கும், பரிந்துரை செய்த தலைவர் வைகோ அவர்களுக்கும் நன்றி...நன்றி...
மணப்பாறை மக்களே இண்டர்சிட்டி ரயிலை முழுமையாகப் பயன்படுத்துவோம்.
மணவை தமிழ்மாணிக்கம்
மாநிலச் செயலாளர்-மாணவர் அணி
மறுமலர்ச்சி திமுக
என மதிமுக மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment