Thursday, April 30, 2015

திரு.ஜகுபர் அலி-க்கு க்கு கொலை மிரட்டல். ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனம்!

இஸ்லாம் மசூதிகள் தொழுகை நடத்துகின்ற தலங்கள் அல்ல, அவை வெறும் கட்டிடம் மட்டுமே என பாரத தேசத்தின் இறையாண்மையை சீர்குலைக்கும் கருத்தை கூறியிருந்த சு.சுவாமி க்கு கடுமையான கண்டனத்தை ஓமன் மதிமுக இணையதள அணியின், வைகோ வெறியர், பாசத்திற்குரிய சகோதரர் திரு.ஜகுபர் அலி அவர்கள் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்கள். அப்போதும் அவர்கள் பதிவேற்றம் செய்த அந்த கண்டன பதிவிற்காகவும் மிரட்டல் வந்தது. அதை அவரும், நாங்களும் அசட்டை செய்யவில்லை. தெருவோரம் அலையும் ஜந்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என நினைத்து பணிகளை தொடர்ந்தோம்.

ஆனால் இன்றும் சகோதரர் திரு.ஜகுபர் அலி அவர்கள், "6000 புலிகளுடன் பயிர்ச்சி... அடுத்த கட்ட போருக்கு தயாராகிறார் மாவீரன் பிரபாகரன்" என்னும் புகைப்படத்தை, தலைவர் வைகோ அவர்கள், மதிமுக தொண்டபடையுடன் அணிவகுக்கும் புகைப்படத்தையும், இணைத்து முகநூலில் பதிவிட்டிருந்தார்கள். 

இன்றும் இனந்தெரியாத நபர் இணையதளத்தில் இருந்து சகோதரரின் அலைபேசிக்கு 444 என்ற இலக்கத்திலிருந்து அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சகோதரர் அவர்கள் வைகோவின் வார்ப்பல்லவா, சுகத்தை சுவைக்காமல், துக்கங்களையே சுமந்ததினால், மனந்தளராமல், தைரியமாக அழைத்த இனந்தெரியாத நபரிடம் உன் அலைபேசி இலக்கத்தில் இருந்து அழை. நான் நேரில் வருகிறேன் அப்போது என்ன வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த நபர், உன் மனைவி பிள்ளைகள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என தெரியும் என சரியாக அவர்கள் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அந்த இனந்தெரியாத நபர் சகோதரர் அவர்களை கவனிக்கும், நன்கு தெரிந்த ஆளாகத்தான் இருப்பார். இப்படிபட்ட அழைப்பு விடுத்த அந்த நபருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, இதுபோன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடகூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கிறோம்.

இதுபோன்ற நபர்கள் நம்மை ஏதும் செய்ய திராணியில்லாத காரணத்தினால், நமது கட்சியினரை சிறு மனக்குழப்பத்தில் தள்ளிவிட பார்க்கின்றனர். அதற்கெல்லாம் நாம் சழைத்தவர்கள் அல்லர் என்பதை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தலைவர் வைகோ அவர்களை முதல்வர் அரியணையில் அமர வைத்து எதிரிகளுக்கு சாட்டையடி கொடுப்போம். 

"முன்னேறி செல்வோம், அதிகாரத்தை கைப்பற்றுவோம்"

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

தலைமகன் வைகோவின் திருவாசக விவரிப்புகள்!

திருவாசகம் 51 தலைப்புகளை கொண்டது... 656 அல்லது 658 பாடல்கள் என்று சொல்வார்கள்... இந்த 51 தலைப்புகளில் பத்து பத்து பாட்டாக 19 பத்துகள் இருக்கின்றன... ஒரு அதிகாரத்துக்கு குறள்கள் பத்து ... மோசசின் கட்டளைகள் பத்து...

சங்க இலக்கியங்களில் பத்து பாட்டு என்பது...
"முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருனர் ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை, நெடுனல்வாடை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்." என்ற பத்து நூல்கள் உள்ளன...

அதை போலத்தான் திருவாசகத்தில் 51 தலைப்புகளில் 19 பத்துகள் இருக்கின்றன.....
அச்சப் பத்து, அடைக்கலப்பத்து, அருள்பத்து, அதிசிய பத்து, அற்புதப் பத்து, அன்னைப்பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிபத்து, கண்ட பத்து, குயில்பத்து, குலாபத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து, சென்னிப்பது பிடித்த பத்து, பிரார்த்தனைபத்து, புணர்ச்சிப் பத்து, யாத்திரைப்பத்து, வாழாப்பத்து........

இப்படி அடுக்கி செவிகளுக்கு விருந்தளித்து புருவங்களை உயர் வைத்தவர் யார் தெரியுமா....

தமிழ்... தமிழின உயர்வு, தமிழின வாழ்வாதாரம் என வாழ் நாள் முழுதும் சிந்திக்கும் எங்கள் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் ....

(செய்தி சேகரிப்பு : அம்மாபேட்டை கருணாகரன், இளையராஜாவின் திருவாசக இசை வெளியீட்டு விழாவில்....)

மதிமுக இணையதள அணி - ஓமன்

தாயகத்தில் தலைவர் வைகோ மே தின சிறப்புரை!

உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் நாளை உலகெங்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

அது போல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முண்ணனி (Marumalarchi Labour Front) சார்பாக நாளை காலை 10 மணி அளவில்,  தியாகத் தழும்பேறிய புதுவை அண்ணன் செ.முத்து அவர்களின் தலைமையில் தொழிலாளர் தின விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவில் தலைவர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். எனவே தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

தொழிலாளர் தினம் வைகோ வாழ்த்து!

“இந்த உலகத்தை இயக்குகின்ற மூலதனமான சக்திதான் தொழிலாளர்களின் உழைப்பாகும்” என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் உதிரம் சிந்தி செய்த பிரகடனத்தைத்தான் மே நாளாக உலகம் கொண்டாடுகிறது.

1886 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் நடத்திய உரிமைப் பேரணியில் காவல்துறை கொடிய அடக்குமுறையை ஏவியது. துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமுற்றனர். நான்கு பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1888 இல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு மே முதல் நாளை தொழிலாளர்களின் உரிமை நாளாக அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டு 1889 ஜூலை 14 இல் பிரெஞ்சு புரட்சியின் 100 ஆவது ஆண்டு விழா, பொதுவுடமை தத்துவத்தின் இரண்டாவது அகில மாநாடாக பாரீஸ் பட்டணத்தில் கூடி, “மே முதல் நாள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை நாள்” என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 126 ஆண்டுகளாக மே முதல் நாள் பாட்டாளி வர்க்கத்தின் உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் வர்க்கம் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடியும், வரலாற்றை உலுக்கிய புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியது.

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மீண்டும் அரங்கேற்றும் விதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஏழைத் தொழிலாளர்களை ஆந்திர அரசின் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, சித்திரவதை செய்து, படுகொலை செய்துள்ளனர். இந்தக் கோரக் கொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி தண்டிக்க உறுதி ஏற்போம்!
உழைக்கும் உத்தமர்களாம் தொழிலாளர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Wednesday, April 29, 2015

இளைய தலைமுறை கட்சி பொதுச்செயலாளர் இனியனுக்கு நன்றி!

20 தமிழர்கள் படுகொலை மற்றும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க, "எங்கு தமிழருக்கு இன்னல் என்றாலும் ஓயாமல் போராடும் அய்யா வைகோ அவர்களை தமிழக முதல்வராக்குவோம்" என்று அனைத்து கட்சி தலைவர்கள் இருந்த, தமிழர் நீதி பேரணிக்கான பொதுமேடையில், மதிமுக பொதுசெயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களை பாராட்டி பேசியதற்கு நன்றி தெரிவிக்க, அனைத்து மாணவ மன்றங்களை இணைத்து, புதிதாக துவங்கப்பட்ட இளைய தலைமுறை கட்சியின் பொது செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் திரு.இனியன் ஜாண் அவர்களை தொடர்புகொண்டேன். 

அப்போது தலைவர் வைகோ அவர்களை பாராட்டி பேசியதற்கு நன்றியையும், இளைய தலைமுறை கட்சிக்கு  வாழ்த்துதலையும் தெரிவித்தேன். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்து விட்டு பின்வருவனவற்றை என்னிடத்தும் சுட்டிக்காட்டினார்.

"வைகோ தமிழகத்தை ஆளும் நாளே நம் இனத்தின் விடியல்"

இதை கேட்டமாத்திரத்தில் இன்னும் மகிழ்ச்சியில் நானிருக்க, எப்போதும் தொடர்பிலிருங்கள் என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன். 

தோழர்களே!!! 

தனி கட்சிகளாக தமிழர்களின் நலனுக்காக களம் காணுகிறவர்களும், தலைவர் வைகோ அவர்கள் தமிழினத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்று கண்கூடாக கண்டு, தலைவரின் தலைமைத்துவத்தை பாராட்டுகிறார்கள். எனவே மதிமுக தொண்டர்களகிய நாம் இன்னும் வேகமாக 2016 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஆயத்தப்படுத்துவோம். தலைவர் வைகோவை முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர வைப்போம். தமிழகத்தை தொடர்ந்து காப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல் 
மதிமுக இணையதள அணி - ஓமன்

20 தமிழர்களின் நீதிக்காக, இன்னுயிர் நீத்த தியாகி வினோத்!

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் பகுதியில், செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என திட்டமிட்டு பொய் குற்றஞ்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த 20 அப்பாவி கூலித்தொழிலாளர்களை சித்திரவதை செய்து சுட்டு படுகொலை செய்த ஆந்திர காவல் துறையை கண்டித்து, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, தமிழர் நீதிப்பேரணி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைமையில் பெருந்திரளாக அமைந்திருந்தது. அதிமுக திமுகவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தமிழர் நீதிப்பேரணியானது கிண்டி ரேஸ்கோஸ் கிளப் அருகிலிருந்து தொடங்கி தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றது. பேரணி தொடங்கிய சிறுது நேரத்தில் காவல்துறையினர் வாகனத்தை குறுக்கே நிறுத்தியும் தடுப்புகளை அமைத்தும் பேரணியை மறித்தனர். எனவே அங்கிருந்து வைகோ, திருமா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை மனுவோடு வாகனங்களில் புறப்பட்டு சென்று ஆளுனர் மாளிகையில் மனுவை கையளித்தனர். இந்நிலையில்தான் அனைத்து கட்சி தொண்டர்களும் காவல்துறையின் தடுப்பு அரணுக்குள்ளே அடைத்துவைக்கப்பட்டனர். தொண்டர்களை போகவிட்டால் கவர்னர் மாளிகை நோக்கி தலைவர்களை பின்தொடர்வார்கள் என்ற அச்சத்தில் காவல்துறை அறிவிக்கப்படாத திறந்தவெளி சிறைச்சாலையை மூடினர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்கள் காவல் துறையின் தடுப்புகளை தாண்டித்தான் தங்கள் வாகனங்களை அடைய முடியும் என்ற அபாயகரமான சூழலை தமிழக காவல்துறை உருவாக்கியது. காவல் துறையின் தடுப்பருகே ஏற்பட்ட இட நெருக்கடியால் மூச்சுத்திணறிய வயதானவர்களும், பெண்களும், நிலைகுலைந்து போயினர். இந்த கூட்ட நெரிசலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிலர் இடதுபுறமிருந்த கிண்டி இரயில் நிலையம் பக்கமாக ஏறிக்குதித்தனர். 

இந்த நேரத்தில்தான் தமிழகத்தை உலுக்கிய இந்த கோரச்சம்பவம் அரங்கேறியது. 

மக்கள் ரயில் நிலையத்தை கடந்துகொண்டிருக்கும் போதுதான் ஒரு வெடிச்சத்தம் போல பெரிய சத்தம் கேட்டது. கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க, தமிழக வாழ்வுரிமை கட்சியின் அருமை சகோதரர் சிதம்பரத்தை சேர்ந்த "வினோத்" ரயில் தண்டவாள வழியை கடக்க முயன்றார். அப்போது கையில் வைத்திருந்த உயரமான இரும்பு  கொடி கம்பியானது, மின்சார புகைவண்டி இயங்க மின்சாரமளிக்கும் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரச, கரிக்கட்டையாய் தூக்கிவீசப்பட்டார் வினோத். வயிற்றுப்பகுதி எரிந்துகொண்டே இருந்தது. மரண வேதனையால் வினோத்தின் கைகள் துடித்தது. 90% உடல் கருகிப்போன வினோத்தை காவல் துறை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்து சென்றது. வினோத்திற்கு ஏற்ப்பட்ட விபரீதம் தொண்டர்கள் மத்தியில் பரவினால் ஆபத்து என்பதை உணர்ந்த காவல் துறை, அவசரம் அவசரமாக தடுப்புகளை அகற்றி அங்கே இருந்து தொண்டர்களை வெளியேற்றியது. 

தமிழக காவல்துறையின் தவறான அடக்குமுறையால் இந்த கோர சம்பவம் நடந்தேறியது. தடுப்பு அமைக்காமல் இருந்திருந்தால் வினோத்தின் மரணத்தை கண்டிப்பாக தடுத்திருக்கலாம்.

இந்த செய்தியானது, 20 தமிழரின் நீதிக்காக மனுவை கையளிக்க ஆளுநர் மாளிகைக்கு சென்ற தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற தலைவர்கள் உயிருக்கு ஊசலாடிகொண்டிருந்த சகோதரரை பார்க்க, தலைவர்களின் நெஞ்சங்கள் உருகி போனது. 

இன்று மதிய வேளையில் சகோதரர் வினோத் நம்மை விட்டு பிரிந்து  தியாக சுடர் ஆனார்.

தமிழீழ தமிழருக்கு நீதி வேண்டி சகோதரர் முத்து குமார் தியாக சுடர் ஆனார்,
3 தமிழரின் தூக்கு கயிரை அறுக்க, அவர்களின் நீதிக்காக சகோதரி செங்கொடி தியாக சுடர் ஆனார்.
சகோதரர் வினோத் அவர்களும் அதன் வரிசையில், ஆந்திர காவல் துறையால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் நீதிக்காக தியாக சுடர் ஆனார்.

தமிழர்கள் உயிர் கொடையளிக்க நீதிகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

வினோத்தின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரின் இதயங்களை உறைய வைத்தது. பின்னர் தலைவர்கள் வைகோ, திருமா, வேல்முருகன், பிற அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் சகோதரர் வினோத்திற்கு மலர் வைத்து இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் சகோதரர் வினோத் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என்று சித்தரிப்பதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்!

தமிழக மீனவர்களை சர்வதேச கடத்தல்காரர்களைப் போல சித்தரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“கடலில் மீன் பிடித் தொழிலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசின் கடலோர காவல்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிங்களக் கடற்படை நமது கடல் எல்லைக்குள் நுழைந்து இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், மீன்பிடி கருவிகளை பறிமுதல் செய்யும் அக்கிரமத்தையும் தடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்த முன்வராத மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 27 அன்று விசாரணைக்கு வந்தபோது, “இந்தியக் கடல் எல்லையில் மீன் வளம் குறைந்ததால், நமது மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, நமது மீனவர்கள் தங்கம், போதைப்பொருட்கள் கடத்துகின்றனர். தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர். இலங்கை மீனவர்களின் மீன்பிடி கருவிகளை தமிழக மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்களின் சட்ட விரோத செயல்களால்தான், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 2014 ஜனவரி முதல் தற்போதுவரை இந்திய மீனவர்களின் 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 937 மீனவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் கடல் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்ட படகுகளின் பதிவு எண்களை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்தியக் கடல் எல்லையில் மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கியதாக இதுவரை கடலோர காவல்படைக்கு எவ்வித புகாரும் வரவில்லை, இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பது தவறானது” என்று இந்தியக் கடலோர காவல் படையின் துணை தலைமை இயக்குநர் சார்பில், மத்திய அரசின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் மேற்கண்டவாறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுத் தள்ளுவோம்” என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதற்கும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக மீனவர்களைக் குற்றம் சாட்டி மத்திய அரசு தற்போது மனு தாக்கல் செய்துள்ளதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது மீனவர்களை சுடுவதும், படகுகள் மற்றும் பிற கருவிகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாகிவிட்டது.
இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கத் தவறிய மோடி அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக, தமிழக மீனவர்களைக் “கிரிமினல்கள்” என்று கருத்துக் கூறுவது மன்னிக்க முடியாத செயலாகும்.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, April 28, 2015

மதிமுக கடைத் தொண்டன் சேவியர்-க்கு பிறந்தநாள் வாழ்த்து!

தலைவர் வைகோவின் எண்ண ஓட்டங்களை சிறுவயது முதலே சிந்திக்கும், அவரின் செயல்களை உற்று கவனித்துக்கொண்டிருக்கும், அரசியல் வாழ்வில் தலைவருக்கு எத்தனை தோல்விகள் வந்து சேர்ந்தாலும் தொண்டனாக தலைவரின் மேலுள்ள தீராத நம்பிக்கையால் மறுமலர்ச்சி திமு கழகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் களமாடுகின்ற என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் என் வகுப்பு தோழன், கைப்பந்து விளையாட்டிலே எனது அணி தோழன், என் எண்ணமெல்லாம் தலைவர் பக்கம் இருந்தாலும், பொதுவாகவே கட்சி சாராமல் பணி செய்தவனை, மறுமலர்ச்சி பாசறையிலே தனது வீரியமிக்க பேச்சால் தலைவரின் கருத்துகளை எப்போதுமே எடுத்து கூறி என்னையும் மறுமலர்ச்சி திமு கழகத்திலே கழப்பணியாற்ற வைப்பதற்கு காரணமாயிருந்தவர்களில் ஒருவனுமான ஆருயிர் தோழன் சேவியர் அவர்களுக்கு ஓமன் இணையதள அணி சார்பில் மனமொத்த பிறந்தநாள் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பனின் நினைப்பெல்லாம் கழகத்தின் மீதான தீராத காதலால் நிரம்பி வழிகின்றன. வற்றாத நதியாக பெருக்கெடுத்து ஓடட்டும். நண்பன் பல்லாண்டு காலம் வாழட்டும், கழகப்பணிகளை செவ்வனே செய்யட்டும், கழக தூண்களில் வலுப்பெறும் தூணாய் மாறட்டும்.உழைத்து பல உயர் நிலைகளை அடைய வாழ்த்துக்களை கூறிகொள்கிறோம்,

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

20 தமிழர் நீதிக்கான பேரணியில் குலுங்கியது சென்னை!

குருவிகளை சுட்டுத்தள்ளுவதுபோல 20 தமிழர்களை திட்டமிட்டு சுட்டி படுகொலை செய்த ஆந்திர காவல் துறையை கண்டித்து, இறந்த தமிழர்களுக்கான நீதி பேரணி கிண்டி ரேஸ் கிளப் அருகிலிருந்து புறப்பட்டு தமிழக ஆளுந மாளிகையை நோக்கி தொடர்ந்தது, வைகோ, திருமாவளவன், வேல்முருகன், குளத்தூர் மணி, ஜாண்பாண்டியன் மற்றும் பிற கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புகைப்பட சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

20 தமிழர் நீதி பேரணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை!

20 தமிழர்களின் நீதிப்பேரணிக்காக மாணவர்கள் ஏந்தி வந்த சுடர், மதிமுக தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில், பண்ருட்டி வேல்முருகன், வைகோ, சிவகாமி.இ.ஆ.ப, ஜாண்பாண்டியன், இடது கம்யூனிஸ்ட் தலைவர் வீரபாண்டியன் மற்றும் பல தலைவர்கள் உரையாற்றினர். அதில் உரையாற்றிய திருமாவளவன், மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்தி இல்லை என கூறினார். மேலும் 20 பேர் படுகொலை வழக்கில் முதல்வருக்கு,அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என வேண்டுகோள் வைத்ததோடு, விடுதலை சிறுத்தைகள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கின் நிலை அறிந்து தலைவர் வைகோ அவர்கள் தானாகவே முன் வந்து இந்த வழக்கில் திரு .ராம் ஜெத்மலானி அவர்களை ஆஜராக கேட்டு கொண்டதையும் சுட்டிக்காட்டினார். 

மதிமுக தலைவர் வைகோ பேசும்போது ஆந்திர மந்திரி நாவை அடக்கி பேச வேண்டும்.,மனிதாபமற்ற ஆந்திர அரசு, இந்தியா எங்களுக்கு தேவையா என்ற கேள்வி கூடியிருக்கும் இந்த இளைஞர்கள் மத்தியில் எழும்... காக்கை குருவியை விட தமிழன் கேவலமா, ஆந்திராவில் நடத்தப்பட்டது தமிழர்கள் மீதான திட்டமிட்ட என்கவுண்டர் என்றும் சாடினார். 

பின்னர் இவ்வளவு பிரமாண்டமான எழுச்சி மிகு பேரணியை நடத்த ஒருங்கிணைத்த தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

தமிழர் நீதி வேண்டி அனைத்துகட்சியினர் ஓரணியில் பங்கேற்பு!

ஆந்திர காவல்துறையால படுகொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களுக்கு நீதி வேண்டி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நீதி பேரணி நடக்கிறது. இந்த கூட்டமைப்பில அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் ஓரணியில் கலந்துகொண்டு செம்மரங்களை தமிழனா கடத்தினான் என வீர முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்வில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பண்ருட்டி வேல்முருகன், திருமாவளவன், தோழர் தியாகு, அப்துல் சமது, குளத்தூர் மணி, கொங்கு தேசிய மக்கள் கட்சி ஈஸ்வரன், அற்புதம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்

மதிமுக இணையதள அணி - ஓமன்

20 தமிழர்கள் நீதி வேண்டி மற தமிழர்கள் படையெடுப்பு!

செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என பொய் குற்றஞ்சாட்டி 20 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர காவல்துறையை கண்டித்து தமிழர் நீதி பேரணி ஆளுநர் மாளிகையை நோக்கி செல்ல இருக்கிறது. இதற்காக கிண்டி ரேஸ் கிளப் அருகில் மதிமுக தொண்டர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மற்றும் பிற கட்சியினர், பல தமிழ் இயக்கங்களின் தொண்டர்களென ஏராளமானோர் பேரணிக்காக தயாராகி வருகின்றனர். மதிமுக தொண்டர்படை அணிவகுப்பு ஒழுக்கத்தை கடைபிடிப்பது அனைவரையும் வியக்கும்படியாக இருக்கிறது என பிற கட்சியினர் வியப்படைகின்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

தமிழர் நீதிப் பேரணி கிண்டி எம்.ஆர்.சி. மைதானத்தில் தொடங்கும்!

தமிழர்களின் இதயத்தில் கொந்தளிக்கும் வேதனையை மத்திய மாநில அரசுகளுக்கும், ஆந்திர அரசுக்கும் உணர்த்திடும் வகையில், 20 அப்பாவி தமிழ் கூலித்தொழிலாளர்களை படுகொலை செய்ததை கண்டித்து, தலைநகர் சென்னையில் இன்று ஏப்ரல் 28 - மாலை 4 மணிக்கு சைதை பனகல் மாளிகை அருகில் இருந்து புறப்பட இருந்த பேரணியானது இடம் மாற்றம் செய்யப்பட்டு, கிண்டி எம்.ஆர்.சி. மைதானம்(கிண்டி ரேஸ் கிளப்) அருகில் இருந்து தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடைபெற இருக்கிறது. எனவே தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

சிவகங்கையின் சீமை மானாமதுரை மருது-க்கு பிறந்த நாள் வாழ்த்து!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் தமிழகத்தை அதன் வாழ்வாதாரத்தை காக்க எங்கெல்லாம் போராடுகிறாரோ, அங்கெல்லாம் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு போராட்டகளத்திலே போர் புரியும் எங்கள் ஆருயிர் சகோதரர், இணையத்தளத்தில் கழகத்தின் நிகழ்வுகளை அதன் செயல்பாடுகளை தான் கலந்துகொள்ளும் நேரங்களிலெல்லாம், ஏவுகணையின் வேகத்தில் உடனுக்குடன் ஈட்டியை போன்ற கூர்மையான செய்திகளை பதிவேற்றம் செய்து கழகத்தை உலகறிய செய்யவும், இணையத்தில் எதிரிகளின் முரண்பாடான தலைவர் வைகோ பற்றிய கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தோடு பதிலளிக்கும் இணையத்தின் போர்வாள் களஞ்சியம், ஆருயிர் அண்ணன் மானாமதுரை மதிமுக மருது அவர்களுக்கு, ஓமன் இணையதள அணி சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

மதிமுக ஒன்றிய கழக செயலாளராக இருந்த இவர் மதிமுகவின் பைந்தமிழ் புலவர் செவந்தியப்பன் பட்டறையிலே வார்ப்பிக்கப்பட்ட இலக்கிய பேழை. மக்கள் பணத்தை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தியில், தன் சொந்த காசை செலவழித்து தமிழகத்தை காக்க போராடும் மக்களின் பெருமதிப்பிற்குரிய தலைவர் வைகோவின் போர் படையின் உத்வேகத்தின் உச்சம். அண்ணன் மருது அவர்கள் ஆற்றுகின்ற கழகப்பணிகள் தலைவரின் பார்வையில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. 

கழகத்தின் அனைத்து கண்மணிகளிடத்திலும் அன்புள்ளவராக திகழுகின்ற சகோதரர், தனது அயராத கழகத்திற்கான உழைப்பால், கழகத்திலே பல பதவிகளை அலங்கரிக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, April 27, 2015

தமிழர் நீதிப் பேரணிக்கு பெருந்திரளாய் வாருங்கள்!

20 அப்பாவி தமிழ் கூலித் தொழிலாளர்களை செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என பொய் குற்றச்சாட்டின் பேரில் அழைத்து சென்று படுகொலை செய்தது அம்பலமான நிலையில் 20 பேர் படுகொலைக்கு நீதி வேண்டி நாளை ஏப்ரல் 28 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.00 மணியளவில் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகையிலிருந்து இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடக்க இருக்கிறது.
 
இந்த மக்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் அணி அணியாய் திரண்டு வந்து, வீரியமிக்கதாக மாற்றி சென்னையையே குலுங்க செய்யவேண்டும். டெல்லி அதிரும்படி செய்ய வேண்டும். பிரதம அலுவலகத்தின் காதுகளுக்கு உரைக்கும்படி ஒலிக்க வேண்டும். எனவே தமிழர்களே...
 
வாருங்கள் அலைகடலாய்...
போராடுவோம், நீதியை பெறுவோம்...
 
மதிமுக இணையதள அணி - ஓமன்

பவானி சிங் நியமனம் செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கி உள்ள தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் ஊழல்வாதிகள் மீது விழுந்துள்ள சவுக்கடிகள் ஆகும்.

“எந்த ஒரு ஊழல் வழக்கையும் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது. ஊழல்வாதிகள் பெற்ற ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாயத்தை ஊழல் பாதித்துள்ளதை அறிந்து செயல்படுவது அவசியம். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்” என்று கூறியுள்ள நீதிபதிகள், பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது விஷத்தைப் பாய்ச்சும் செயல் என்று கடுமையாகச் சாடி உள்ளனர்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ‘நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு அளிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கோரி உள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு, பொதுவாழ்வில் ஊழலில் ஈடுபடுவர் எவராக இருந்தாலும் நீதி தேவனை வளைக்க முடியாது; நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

தக்காளி பதப்படுத்தும் குடோன் திறக்க மதிமுக வலியுறுத்தல்!

கோவை மதுக்கரை பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி கட்டி முடித்த தக்காளி பதப்படுத்தும் குடோன் விரைவில் திறக்க வேண்டும் என் தேர்தலுக்கு மட்டும் உங்களை தேடி வரும் கொள்ளை அடிபவர்களுக்கு மத்தியில் மக்கள் பணியில் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கும் பணத்துக்காக வாழாமல் இனத்துக்காக வாழும் வைகோவின்அன்பு தம்பி மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர். வே ஈஸ்வரன், அவர்கள் தமிழக வேளாண் அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் 500 மெட்ரிக் டன் கொண்ட பதபடுத்தும் கிடங்கை திறக்காமல் தாமதிப்பது விவசாயிகளுக்கு மேலும் பெரும் இழப்பாகும். எனவே அதை திறந்து விவசாயிகளுக்கு பயன் பெற செய்ய ஆவன செய்யுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

பால் கொள்முதல் மற்றும் விலை குறைப்புக்கு வைகோ கண்டனம்!

தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில், பால் உற்பத்தி ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மொத்தம் 11 ஆயிரத்து 503 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதோடு மகளிருக்கென 1793 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ள 2 இலட்சத்து 11 ஆயிரத்து 742 பால் உற்பத்தியாளர்கள்,பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பால் தேவை நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் ஆகும். இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 25 இலட்சம் லிட்டரும், ஆவின் நிறுவனம் மூலம் 25 இலட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்பட்டு, மக்களின் பால் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது.
தமிழக அரசு கடந்த 2014 அக்டோபர் மாத்தில் பால் கொள்முதலில், பசும்பால் விலையை ஒரு லிட்டர் ரூ.5 ம், எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ. 4ம் உயர்த்தி, முறையே ரூ. 28 மற்றும் ரூ.35 என பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது பால் கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதல் செய்யும் போது பாலின் தரம், அடர்த்தி நிலையைக் காரணம் காட்டி, அரசு நிர்ணயித்துள்ள விலையில் இரண்டு ரூபாய் குறைத்து வழங்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறியுள்ளனர். கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதலை 10 விழுக்காடு அளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி அறிந்து ஓ.பன்னீர்செல்வம் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக வேளாண்மைத் தொழிலில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், சிமெண்ட் விலை உயர்வு, மணல் விலை உயர்வு போன்ற காரணத்தால் வேலையின்றி தவிக்கும் கட்டுமானப் பணியாளர்களுக்கும், கால்நடை செல்வங்கள்தான் ஆதாரமாக இருக்கின்றன. பால் உற்பத்தி தொழில்தான் ஏழை எளிய மக்களை வாழ வைத்து வருகின்றது. இச்சூழலில் அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலையைக் குறைத்து வழங்குவதும், பால் கொள்முதல் அளவை குறைப்பதற்கு உத்திரவிட்டுள்ளதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளால் மக்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதற்கு கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சாதகமாகக் கருதுகின்ற தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் பால் கொள்முதல் விலையில் மூன்று ரூபாய் குறைத்துவிட்டன.
கால்நடைகளுக்கு தீவனங்கள் அளித்து பராமரிக்க முடியாமல் கிராமப்புற மக்கள் திணறிக்கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க. அரசு அறிவித்தபடி கால்நடை தீவனங்கள், பசுந்தாள் தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் உருப்படியாக செயல்படவில்லை. விவசாயிகள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் கால்நடைகளைப் பராமரித்து பால் உற்பத்தி செய்தால், அரசு சார்பில் இயங்கும் பால் கூட்டுறவு மையங்கள் அதை முழுமையாகக் கொள்முதல் செய்ய மறுப்பதும், கொள்முதல் விலையைக் குறைத்துத் தருவதும் முறையற்ற செயல் ஆகும்.
இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் இந்நிலை தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதுடன், தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் மற்றும் பால் விற்பனை செய்யவும், விலை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, April 26, 2015

பெரியாரை இகழ்ந்த மாா்க்கண்டேய கட்ஜுவுக்கு கடும் கண்டனம்!

தந்தை பொியாரை பிாிட்டிஷ் அரசின் தரகா் என்று பாா்ப்பன விசமத்தோடு கருத்து தொிவித்துள்ள பாா்ப்பன கிருமி மாா்க்கண்டேய கட்ஜுவுக்கு ஓமன் இணையதள அணி சார்பில் கடுமையான கண்டணத்தை தொிவித்து கொள்கிறேன். முகநூலில் கட்ஜூ பதிவிட்டுள்ள பதிவினையும் இணையதள நண்பர்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன்.

இந்த கட்ஜு தனது சுய விளம்பரத்திற்காக மாபெரும் தலைவர்களை, தீண்டாமையை அறவோடு ஒளிக்க பாடுபட்டவர்களை குறை கூறி வருகிறார். இது அவரது மூளையில் சு.சுவாமி ஏற்கனவே கூறியது போல புற்று நோயின் தாக்கமாக கூட இருக்கலாம் என தெரியப்படுகிறது. எனவே கட்ஜூ க்கு தெரிந்தவர்கள் கட்ஜுவை தகுந்த மருத்துவமனையிலே சேர்த்து சரியான சிகிச்சையளிக்குமாறு கேட்டுகொள்கிறோம். மேலும் இதுபோன்று மாபெருந்தலைவர்களை கட்ஜூ விமர்சித்தால் தமிழர்கள் சும்மா பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்