Friday, July 31, 2015

திருவள்ளூர் மாவட்ட மதிமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் வைகோ!

நாளை நடைபெறவுள்ள (01-08-2015) திருவள்ளூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டமானது அம்பத்தூர் தொழிற்பேட்டை, எம்.டி.எச் ரோடு, தொலைபேசி அலுவலகம் அருகில் உள்ள எச்.பி.எம் திருமண மண்டபத்தில் காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். கழகத் தோழர்கள் பெருமளவு கலந்து கொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

சசி பெருமாள் சாவு இயற்கையா, கொலையா வைகோ கேள்வி காணொளி!

குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் மதுவை ஒழிக்க பல வருடங்களாக போராடி வருகின்ற காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் அலைபேசி கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். 5 மணி நேரமாக அந்த போராட்டத்தை நடத்தியுள்ளார். பின்னர் காவல்துறை அவரை கீழே இறக்கியுள்ளனர். அபோது அவர் இறந்துள்ளார். இதனையறிந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமைக்கு விரைந்து சரிபெருமாள் உடலை பார்த்து மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக அரசை குற்றஞ்சாட்டி ஆவேசமாக பேட்டியளித்த காட்சி காணொளியாக....
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

இரவு 8 மணிக்குபத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் வைகோ!

சசிபெருமாள் மரணம் குறித்து இன்று இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

சசி பெருமாள் உடலுக்கு வைகோ நேரில் கண்ணீர் அஞ்சலி!

குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதியும், மது ஒழிப்பிற்காக போராடி வருபவருமான சசி பெருமாள் அவர்கள் இறந்த செய்தியை அறிந்த வைகோ அவர்கள், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்தார். குழித்துறை மருத்துவமனைக்கு சசிபெருமாள் கொண்டுசெல்லப்பட்டார் என்று அறிந்து மருத்துவமனைக்கு எதிரே திரண்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். சசிபெருமாளின் சடலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிந்து அங்கு சென்றார். சசிபெருமாள் உடலைப் பார்த்தபோது கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார். அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் இரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன. மூக்கு வழியாகவும் இரத்தம் வந்துள்ளது. அப்படியானால் சசிபெருமாள் எப்படி உயிர் நீத்தார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பின்னர் சசிபெருமாள் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைகோ. வைகோவுடன் மதிமுக குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் சென்றிருந்தார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

சசிபெருமாள் மரணத்துக்கு அதிமுக அரசே காரணம் வைகோ குற்றச்சாட்டு!

தமிழக மக்களை மது அரக்கனின் கோரப் பிடியிலிருந்து மீட்பதற்காக காந்தியவாதி சசிபெருமாள் உயிரையே பணயம் வைத்து கடந்த சில ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்து இடைவிடாத உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களை நடத்தி வந்த காந்தியவாதி சசிபெருமாள் துயர மரணத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.. அரசே முழுப்பொறுப்பாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்துக்கு அருகில் உள்ள உண்ணாமலைக்கடை எனும் ஊரில் தேவாலயங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள். இந்தப் பின்னணியில் காந்தியவாதி சசிபெருமாள் அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது தமிழக அரசு அதிகாரிகள் ஒரு வார காலத்துக்குள் டாஸ்மாக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்றி விடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை.

நேற்றைய தினம் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சிக்கு சசிபெருமாள் வந்திருந்தார். அங்கிருந்து நேற்று இரவே குமரி மாவட்டத்துக்கு வந்த சசிபெருமாள் அவர்கள் இன்று அதிகாலையிலேயே உண்ணாமலைக்கடை ஊருக்கு அருகில் 150 அடி உயரத்துக்கும் அதிகமாக உள்ள அலைபேசி கோபுரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

டாஸ்மாக் கடையை அகற்றாவிடில், என் கையில் உள்ள தீப்பந்தத்தால் என்னை தீ வைத்துக் கொளுத்தி உயிர் விடுவேன் என்று கூறினார். 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் வெறும் பேச்சுவார்த்தை நடத்தினார்களே தவிர, அந்த டாஸ்மாக் கடையை அகற்றவில்லை. வயது முதிர்ந்த சசிபெருமாள் அவர்களின் மனதில் எவ்வளவு உறுதியும் வைராக்கியமும் இருந்திருந்தால் கோபுரத்தின் உயரத்துக்குச் சென்றிருக்க முடியும் என்பதை நாமே ஊகித்துக்கொள்ளலாம்.

இதன் பிறகு காவல்துறையினர் அவரை கோபுரத்தின் உச்சியில் இருந்து அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக கீழே கொண்டுவந்துள்ளனர். கீழே வந்தவுடன் அவர் இறந்துவிட்டார் என்று காவல்துறை அறிவித்தது.

செய்தியைக் கேள்விப்பட்ட நான், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்தேன். குழித்துறை மருத்துவமனைக்கு சசிபெருமாள் கொண்டுசெல்லப்பட்டார் என்று அறிந்து மருத்துவமனைக்கு எதிரே திரண்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். சசிபெருமாளின் சடலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிந்து அங்கு சென்றேன். சசிபெருமாள் உடலைப் பார்த்தபோது கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன். அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் இரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன. மூக்கு வழியாகவும் இரத்தம் வந்துள்ளது. அப்படியானால் சசிபெருமாள் எப்படி உயிர் நீத்தார்?

மனிதாபிமானம் இன்றி அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக அலைபேசி கோபுரத்திலிருந்து அகற்ற முற்பட்டதில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு, இருதயம், நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் அடிபட்டு அவர் இறந்திருக்க வேண்டும். அப்படியானால் சசிபெருமாள் மரணம் இயற்கை மரணம் அல்ல, கொலையால் ஏற்பட்ட மரணமாகத்தான் இருக்க முடியும். உண்மையைக் கண்டறிய இந்தச் சம்பவம் குறித்து பதவியில் தற்போதுள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த நேர்மை தவறாத மருத்துவர்களைக் கொண்டு ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வீடியோ காணொளி கண்காணிப்பில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

சசிபெருமாளின் துயர மரணம் நம் நெஞ்சைப் பிளக்கிறது. இந்தத் தியாகியின் மரணத்துக்கு அண்ணா தி.மு.. அரசே பொறுப்பாளியாகும் என குற்றம் சாட்டுகிறேன்.

தமிழகத்தில் முழுமையாக மதுக்கடைகளை ஒழித்து, மதுவிலக்கை நிலைநாட்டுவது ஒன்றுதான் சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு நாம் செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் சேர்ந்து சசிபெருமாள் மரணத்துக்குக் காரணமான தமிழக அரசைக் கண்டித்து நாளைய தினம் சனிக்கிழமை குமரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

வீரத் தியாகியின் குறிக்கோளை நிறைவேற்ற தமிழ்நாட்டில் தாய்மார்களும், மதுப்பழக்கத்துக்கு ஆளாகாத இளைஞர்களும், குடிப்பழக்கம் எனும் நரகத்தில் விழாத 95 சதவிகித மாணவர்களும் மதுக்கடைகளை ஒழிக்க சபதம் ஏற்க வேண்டும். நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும்; முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற ஆணவத்தோடு அண்ணா தி.மு.. அரசு இனியும் செயல்படுமானால், தமிழக மக்கள் குறிப்பாக தாய்மார்கள் கொதித்து எழுந்து டாஸ்மாக் கடைகளை, ஒயின் ஷாப்புகளை அகற்றி அப்புறப்படுத்தும் நிலைமை உருவாகியே தீரும். அந்த நிலைமையை ஏற்படுத்த தமிழக நலனில் அக்கறையுள்ள அனைவரும் உறுதி எடுப்போம்!

இந்த உத்தமத் தியாகி சசிபெருமாளை இழந்து துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன் என வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதுவிலக்கு போராட்டகளத்திலே உயிர் துறந்தார் தியாகி சசிபெருமாள்!


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார்.அவருக்கு வயது 59.
 

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உண்ணாமலைகடை பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சசிபெருமாள் குற்றம்சாட்டியிருந்தார். பள்ளி,கோயில்களுக்கு அருகே அந்த மதுக்கடை இயங்கி வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது, கடையை அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காததால் தாமும், உண்ணாமலைகடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் செல்போன் டவரில் ஏறி போராடப்போவதாக சசிபெருமாள் அறிவித்தார்.

 
இதன்படி சுமார் 5 மணிநேரம் செல்போன் டவரில் ஏறி நின்ற அவரிடம் , மதுக்கடையை அகற்றுவது பற்றி 7 நாட்களுக்குள் முடிவு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப்பினும் போராட்டத்தை கைவிட மறுத்த சசிபெருமாளை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சசிபெருமாள் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் படுகொலைக்கு தீர்வு எட்டாததையொட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம். வைகோ அறிவிப்பு!

இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம் திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், எந்த சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடாத 20 அப்பாவி ஏழைத் தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். இப்படுகொலை தடயங்களை மறைப்பதற்காக, இந்தத் தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்றும், அதைத் தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கினார்கள் என்றும், அதில் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்றும் அப்பட்டமான கட்டுக்கதையை செய்தியாக்கினர்.

மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொடுமையான அநீதியை எதிர்த்துப் போராடின. குறிப்பாக மனித உரிமைக்கான மக்கள் குடியமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சுரேஷ் தலைமமையில் உண்மை கண்டறியும் குழுவினரை அழைத்துச் சென்று சம்பவம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இடங்களைப் பார்வையிட்டு, நடந்தது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத படுகொலை என்ற அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மூன்று முக்கிய சாட்சிகளான பாலச்சந்திரன், சேகர், இளங்கோ ஆகியோரை ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு நிறுத்தி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.

அனைத்தையும் ஆய்வு செய்ததில் சேசாசலம் பகுதியில் 20 அப்பாவி தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் கொலைசெய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்குகளை மத்திய குற்றப் புலனாய்வுத்துறை சி.பி.. விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது. சி.பி.. விசாரணைக்குத் தடை கோரி ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தற்காலிக தடையைப் பெற்றது.

தமிழகத்தின் 20 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டிப்பதற்கோ, இறந்துபோன தமிழர்களுக்காக ஒரு வார்த்தை அனுதாபம் தெரிவிப்பதற்கோ ஆளும் அண்ணா தி.மு..வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்வரவில்லை.

ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் 20 தமிழர்கள் படுகொலை குறித்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொல்லப்பட்ட தமிழர்களின் பிரேதச பரிசோதனை அறிக்கைகளை அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசை மேற்கொள்ளச் செய்வதற்காக ஜூலை 15 ஆம் தேதி அன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, வழக்கறிஞர் அஜிதா, இயக்குநர் கௌதமன் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்திந்து கோரிக்கையை முன் வைப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டி நான் ஜூலை 15 ஆம் தேதி அன்று பிற்பகலில் முதலமைச்சர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பினேன்.

15 நாட்கள் ஆகியும் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. படுகொலை நடைபெற்று இன்றோடு 114 நாட்கள் கடந்துவிட்டன. தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டிக்கச் செய்யவும், நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையைப் பெற்றுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு தாயகத்தில் நடைபெறும்.

இக்கூட்டத்திற்கான அழைப்பு கடிதத்தை வைகோ அவர்களும், ஹென்றி திபேன் அவர்களும் அனுப்பி உள்ளனர்.

மதிமுக இணையதள அணி – ஓமன்