திருவைகுண்டம் அணை தூர் வாருவது குறித்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல் தொடுத்த வழக்கில் ஆஜராகி வாதிடுவதற்காக இன்று (27.11.2015) காலை 10 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வந்தார் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.
பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜர் ஆனார். மீத்தேன் மற்றும் திரு வைகுண்டம் அணை தொடர்பான வழக்குகளில், மழைக்காலமானதால் தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு காலம் ஒதுக்கி 22-12-2015 க்கு திருவைகுண்டம் அணை வழக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
அப்போது கூறிய நீதிபதி, நீதிமன்றத்திற்காகவோ திரு வைகோ அவர்களுக்காகவோ இல்லாமல் அணை தூர் வாருவதில் நியாயமாக நடந்து கொள்ள பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கினார். மழைநீரை தேக்கி வைப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
வாதம் முடிந்து வெளியில் வந்த தலைவர் வைகோ அவர்களை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொள்ள அவர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், செடிகளை அள்ளுகிறோம் என்ற பெயரில் மணலை அள்ளக்கூடாதென வேண்டுகோள் விடுத்தோம்.
நாளை 28-11-2015 மக்கள் நலக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வெள்ள நிவாரணம் முறையாக வழங்கவேண்டி, ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறுவார்கள்.
ஆனந்த விகடன் மீதான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த தலைவர் வைகோ அவர்கள், மந்திரி தந்திரி தலைப்பில் வந்த கட்டுரையை யார் வேண்டுமானாலும் துண்டு பிரசுரமாக வெளியிடலாம். அடக்குமுறையை மேற்கொள்ளும் போது அது எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்றார்.
செய்தி சேகரிப்பு: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
No comments:
Post a Comment