கடந்த இரண்டு நாட்களாக கடலூரில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களை வீடு வீடாக சந்தித்து குறைகளை கேட்பதோடு நிவாரண பணிகளை செய்து வருகிறார் மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ. மழையோ வெள்ளமோ, பள்ளமோ சமதளமோ, காடோ ரோடோ எதுவானாலும் அந்த பகுதிக்கே சென்று தமிழக முதல்வர் அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணியை மக்களுக்காக செய்து வருகிறார் வைகோ. சமூக நலைதளங்களிலே வைகோவின் செயல் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் வந்து கொண்டிருக்கிறது.
நிலைமைகள் இப்படி இருக்கும் போது இன்றைய தினதந்தியின் எந்த பக்கத்திலும் வைகோ பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஏன் இந்த பாரபட்சம்? ஸ்டாலின் பைக்கில் காலுக்கு பாதுகாப்பு அணிந்து பார்வையிட செல்லும் புகைப்படமும் செய்தியும் வந்திருக்கிறது. விஜயகாந்த் பற்றிய செய்தி வந்திருக்கிறது. ஆனால் புகைப்படத்திற்காக அல்லாமல் அற்பணிப்போடு செயல்படுகின்ற வைகோ பற்றி ஒரு வரி செய்தி இல்லை. தன் தாய் இறந்து ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் செல்லும் செய்தி தமிழகம் முழுவதும் சென்று விட கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?
நடுநிலை செய்தி என்றால் அனைத்து தலைவர்கள் பற்றிய செய்திகளையும் மக்களுக்கு தெரிய படுத்த வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு.
பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதேபோன்று தான் நவீன காலத்தில் பல தொலைகாட்சிகள், சமூக ஊடகங்கள் உள்ள காலத்தில் அனைத்து செய்திகளையும் ஊடகங்கள் தர தவறும் பட்சத்தில் ஊடகங்கள் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய் விடும்.. லட்சோப லட்சம் கொண்ட மதிமுகவையும் அதன் செய்திகளையும் இருட்டடிப்பு செய்வது என்பது உங்கள் மீது நீங்களே சேறை பூசுவது போன்றதாகும்.
செய்தி ஆக்கம்: சுரேஷ் குமார்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment