Sunday, November 22, 2015

ஈழத்தமிழருக்கான மனித உரிமை மீறலுக்கான அரங்க பொதுக்கூட்டம் மலேசியாவில்!

மலேசிய 
நாட்டின் பேராக் மாநிலம் சுங்கை சிப்புட் என்ற இடத்தில் ஈழத்தமிழருக்கான மனித உரிமை மீறல் பற்றிய அரங்க கூட்டம் இன்று 22-11-2015 மாலை நடந்தது.

தலைவர் வைகோ அவர்கள் விரிவுரையாற்றினார். பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அவர்கள் மக்களோடு மக்களாக மேடையின் எதிரே அமர்ந்து தலைவரின்  தீ பறக்கும் வேகத்தில் இருந்த பேச்சை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

தலைவர் வைகோ அவர்களின் துணைவியாரும் மேடையின் எதிரே இருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். 

இந்த உள்ளரங்கு பொதுக்கூட்டத்தில், இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் அவர்கள், இலங்கையில் தமிழ் இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தன் பேச்சால் வேதனையோடு வெடித்து சிதறினார். அப்போது குழுமியிருந்த மக்களின் கண்கள் நிறந்தே காணப்பட்டிருக்கும். அவ்வளவு உணர்வுபூர்வமான பேச்சு.

தொடர்ந்து, இலங்கை வடக்கு மாகாண முன்னாள் MP சிவாசி லிங்கம் அவர்களும் உரையாற்றினார்கள். மேலும் பல தலைவர் உரை நிகழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment