மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் உணவளித்து பசியாற்றிக் கொண்டிருக்கும் தமிழின முதல்வர் வைகோ அவர்கள், தமிழக முதல்வர் அல்ல, எதிர்கட்சித் தலைவரும் அல்ல, இதற்கு முன் தமிழகத்தை ஆண்ட முதல்வர் அல்ல, அவ்வளவு ஏன் உள்ளாட்சி பிரதிநிதி கூட அல்ல.
ஆனால் அவர் தான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை காண கொட்டும் மழையில் முழங்கால் அளவு தண்ணீரில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்திற்கு வருகிறார். காரணம் இவர் தமிழகத்தின் தலையாரி .
பிரதான சாலையில் டெம்போ வாகனத்தில் அமர்ந்தவாறே நகர்வலம் வருகிறார் தமிழக முதல்வர். புகைப்படமெடுக்கக்கூட கால் மழைநீரில் நனையாமல் முழங்கால் அளவு பூட்ஸ் அணிந்து வருகிறார் முடிசூட துடிக்கும் பட்டத்து இளவரசர் .
தன் தாயார் இறந்த ஏழாவது நாள் அவரது சாம்பலை கடலில் கரைத்துவிட்டு அலையாய் சுழன்று கடலூர் வந்தார் . மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியாக சென்றார், மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், அவர்களுக்கு உணவு வழங்கினார் , அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார் .
இது ஒரு மாநில அமைச்சருக்கான பணி அதை இவர் (வைகோ) செய்தார் .
அங்கிருந்து சென்னை வந்தார் சென்னையிலும் கடலூரை போல ஒவ்வொரு பகுதியாக சென்றார். மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் , அங்கேயும் உணவு வழங்கினார் .
ராமதாசை போல இவரும் அமைதியாய் இருந்திருக்கலாம். அல்லது ஸ்டாலினை போல அங்கேயும் சென்று வெறுப்பு அரசியல் செய்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரில் உப்பெடுக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் இவர் நேர்மையாளர். அதனால்தான் குறை சொல்ல இது நேரமல்ல அனைவரும் இணைந்து மக்களை பாதுகாப்போம் என்று சூளுரைத்தார் .
இந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் சொன்ன வரிகள் நினைவிற்கு வருகிறது. "காலம் ஒருநாள் மாறும். அப்போது இந்த தர்ம தேவதையின் (வைகோவின்) கையில் நாடும், நாட்டு மக்களும் பத்திரமாக இருப்பார்கள்"
அந்த நாள் வரத்தான் போகிறது 2016 சட்டமன்ற தேர்தல் களத்தில்...
செய்தி ஆக்கம்: வல்லம் பசீர்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment