மக்கள் நலக்கூட்டணி சார்பில் 20-11-2015 இன்று மதுரை மாநகராட்சியின் அவலத்தை கண்டித்து கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ஞானவொலிவுபுரம் அருகே உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, ஹோலி பேமிலி பெண்கள் பள்ளியருகே பல மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை மூடவில்லை. அதனால் மழைநீர் சாக்கடை சூழ்ந்து காணப்படுகின்றது. பலமுறை சொல்லியும் கேட்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹோலி பேமிலி பள்ளிக்கூடம் மற்றும் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நலக் கூட்டணியனரை காவல்துறை கைது செய்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment