மும்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழத்தின் சார்பாக காட்கோபரில் வைத்து நம் கழகத்தின் பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் கடந்த 9-11-2015 மாலை 3-மணி அளவில் நடைபெற்றது.
மும்பை அமைப்பாளர் செ.தமிழழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மும்பை தோழர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 26ம் தேதி தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கிளை கழக தலைவர் பாண்டியன், பொருளாளர் சுப்பிரமணியன், துரைபாண்டி, சுதேஷ், வேல்முருகன், ஜெகதீஷ், ராமு, குமரேசன், முத்து மற்றும் கிளைக்கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment