மக்கள்
நலக்
கூட்டணியின் கட்சிகளான ம.தி.மு.க,
சி.பி.ஐ, சிபிஎம், வி.சி.க கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் இன்று
25.11.2015 திருச்சி நகரில்
ஃபெமினா ஹோட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவை தொல்.திருமாவளவன்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சமீபத்தில் வெள்ள சேதத்தில் சிக்கி
உயிரிழந்தவர்களுக்கும், தமிழக
சட்டமன்றத்தில் நீண்டகாலம் உறுப்பினராக பணியாற்றிய திருமதி எ.எஸ்.பொன்னம்மாள் அவர்களது மறைவிற்கும் கூட்டத்தின் துவக்கத்தில் அஞ்சலி
செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்
இரா.முத்தரசன் துவக்கவுரையாற்றிய பின்னர், தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்கால பணிகளை
விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்
ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர்களின் கருத்துறைகளுக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
பொதுச்
செயலாளர் வைகோ
நிறைவுரையாற்றினார்.
அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், இந்த மக்கள் நலக் கூட்டணி அமையாது என்று சொன்னவர்கள் வாக்கு பொய்த்துவிட்டது. இப்போது இந்த கூட்டணி ஜெயிக்காது என்று சொல்கிறார்கள். இதுவும் பொய்த்து போகும், வெற்றி பெறும். எங்களது கூட்டணி மவுலிவாக்கம் கட்டட அஸ்திவாரம் அல்ல, கரிகாலன் கட்டிய கல்லணை அஸ்திவாரம் போன்று திட்டமிட்டு மிக பலமாக அமைத்திருக்கிறோம்.
கருணாநிதி டிஆர் பாலுவை டெல்லிக்கு தூது அனுப்பி இந்திய கம்யூனிஸ்டு, மார்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளிடம் பேச சொல்லி கூட்டணிக்கு அழைக்க வந்தார். அவர்கள் ஏற்கனவே நாங்கள் கூட்டணி அமைத்துவிட்டோம் என்று சொன்னார்கள்.
தேமுதிக விற்கும், தமாகா விற்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள் இரண்டு தலைமையும் நன்றி தெரிவித்திருக்கிறது நமக்கு நம்பிக்கையை தருகிறது.
அதிமுகவும் திமுகவும் மக்களால் நிராகரிக்கப்படவேண்டிய தலைமைகள். வைகோ அவர்கள் மலேசியாவிற்கு ஈழதமிழருக்கான கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்த போது மலேசியா விமான நிலையத்தில் தலைவர் வைகோவின் படங்களை அனைத்து அதிகாரிகளுக்கும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மலேசிய அரசு செய்துள்ளது. பின்னர் மலேசிய துணை பிரதமர் நேரடி அதிகாரத்தில் மலேசியாவில் காலடி வைத்தேன் என கூறினார் தலைவர் வைகோ. இலங்கை எவ்வாறு கண்காணிக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
இந்த கூட்டணிக்கு எனக்கு சரியாக கொடுத்திருக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர் என்று. ஏனென்றால் நான் மதிமுக வை 22 வருடமாகவே குண்டூசி முதல் பெரிய தலைகள் வரைக்கும் அரவணைத்து செல்கிறேன். ஒருங்கிணைப்புக்கு காரணம், எனது அணுகுமுறை அணைக்கின்ற தன்மை. அரவணைப்பு என் இரத்தோடு கூடிய இயல்பு, என் சகாக்கள் முகம் வாட நான் சகிக்க மாட்டேன். ஒருங்கிணைப்பு என்ற மையப்புள்ளியை அருமையாக செய்வேன். மன கசப்பு வர விடமாட்டேன்.
நான்கு கட்சிகளை கொண்ட மக்களிடம் போராளியாக நாம், தமிழக அரசியலில் ஒரு மகத்தான மாறுதலை 2016 தேர்தலில் நிறைவேற்றினோம் என்பது 100 ஆண்டுகளுக்கு பேசப்படும். இதை செய்தது இந்த நான்கு கட்சிகளின் கூட்டமைப்பு.நம் கடமையை செய்வோம். ஒரு வேள்வியாக, தவமாக நினைத்துக்கொண்டு செய்வோம். நம்மால் முடியும்.
இந்த நான்கு கட்சிகளில் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், சிந்தனையாளர்கள், நம்மால் கொண்டுவராவிட்டால் மாற்றம் யாரால் முடியும். நம்மை யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாது. ஊழலால் தழைக்கப்பட்ட 2 கட்சிகளும் ஒழிக்கப்படும். 2 கட்சிகள் மீதும் பட்டா கத்திகள் தொங்கிகொண்டிருக்கிறது.
நம் நான்கு கட்சிகளின் யோக்கியதை , நாங்கள் சாதி வெறியை தூண்டமாட்டோம், மத வெறியை தூண்டமாட்டோம், தப்பு செய்யல, தப்பு செய்ய மாட்டோம். ஒரு காசு தப்பா சம்பாதிக்கல, சம்பாதிக்கவும் மாட்டோம். அந்த நம்பிக்கையோடு நாங்க நிக்கிறோம். 2016ல் மக்கள் நலக்கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும்.
தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் இளைஞர்கள் வலை தளங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த சக்திகளான இளைஞர்கள் கவனம் மக்கள் நலக்கூட்டணி பக்கம் திரும்பியிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய தோழர்களில் முதலில் நம்பிக்கையை ஏற்ப்படுத்துவதற்குதான் மதுரையில் டிசம்பர் 12 ஆம் தேதி பிரமாண்ட திறந்தவெளி மக்கள் நலக்கூட்டணி மாநாடு. கூட்டத்தை கூட்டுவோம். நம்பிக்கையை ஏற்ப்படுத்துவோம். பூத் கமிட்டியை போடுவோம். நான்கு கட்சிகளும் சேர்ந்து போராடுங்கள். இப்படி போனால் ஜனவரி முடிவதற்குள் மக்கள் நலக்கூட்டணிக்கு 50% வாய்ப்பிருக்கிறது எழுத ஆரம்பித்துவிடுவார்கள். முதலில் நம்முடைய ஆட்களுக்கு நம்பிக்கை வரட்டும். நம்மால் ஏன் சாதிக்க முடியாது. நம்மிடம் இருக்கும் ஒழுக்கம் அதிமுக, திமுகவிடம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரு ஆள் அவர்களின் 20 ஆட்களுகு சமம்.
நமது கூட்டணி நம்பிக்கை ஊட்டுகிற இடத்தில் இருக்கிறது. 12 ஆம் தேதி கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். நமது கூட்டணியில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. மீதமுள்ள மனு போடுகிற கட்சிகளை வேண்டாம் என சொல்ல வேண்டாம். இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தியிருக்கின்ற திருச்சி மாவட்ட கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட செயலாளர்களே நீங்கள்தான் வெற்றியை ஈட்டி கொடுக்க போகிறவர்கள். 30 ஆம் தேதிக்குள் ஒன்றிய அளவில் கூட்டத்தை கூட்டுங்கள். வருகிற 12 ஆம் தேதி மதுரை பிரகடனம் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாறுதலுக்கு நுளைவு வாயிலாக அமையும் என்று கூறி 2016 மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் கலைந்து செல்வோம். வணக்கம்.
No comments:
Post a Comment