Wednesday, November 11, 2015

சங்கொலியின் அங்கிகாரம் ஆகாயத்தை விட உயர்ந்ததன்றோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே!

திரவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு, தமிழனுக்காக தன் வாழ்நாலை அற்ப்பணித்து அனுதினமும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கின்ற தலைவன், தமிழின முதல்வர் வைகோ அவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கிறோம். அந்த தலைவனின் செய்திகள் மதிமுக அதிகார ஏட்டில் பதியப்பட்டு பிரசுரம் செய்யப்படுகிறது வாரம்தோறும். 

அந்த வகையில் இந்த எளியவன் (மறுமலர்ச்சி மைக்கேல்) வளைகுடா நாடான ஓமன் நாட்டில் வேலை நிமித்தம் வசிப்பதால், எனக்கு தெரிந்த சில செய்திகளை கட்டுரையாக சுருக்கமாக வனைந்துள்ளேன். விரிவாக எழுதவேண்டுமென்றால் ஒரு நாட்டின் முழு வரலாற்றையே எழுதவேண்டும்.

நான் சுருக்கமாக எழுதி ஓமன் நாட்டின் நடைமுறைகளை தந்துளேன். அந்த செய்தி நமது கழக ஏடான சங்கொலியில் 13-11-2015 பதிப்பில் 21 மற்றும் 22 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த எளியவனுக்கு (மறுமலர்ச்சி மைக்கேல்) சங்கொலி கொடுத்த மிகப்பெரிய அங்கிகாரம் இதுவே. சங்கொலியில் ஒரு வரி வந்தாலே பெரிய பாக்கியமாக கருதுபவன், இரண்டு முழு பக்கமும் பிரசுரம் செய்துள்ளார்கள். மேலும் அடுத்த பதிவிலும் தொடரும் என்பதை எண்ணி பூரிப்படைகிறேன். அந்த கட்டுரையை இதில் இணைத்துள்ளேன். 

இந்த கட்டுரையை எழுதவும், வெளியிடவும் காரணமாயிருந்த அன்புக்குரிய அண்ணன், கடந்த 28 வருடத்திற்கு மேல் தலைவர் வைகோவின் தனிச்செயலாளராக இருக்கும் அருணகிரி அவர்களுக்கும், சங்கொலி ஆசிரியர் தலைவர் வைகோ அவர்களுக்கும், அன்புக்குரிய அண்ணன் சங்கொலி நெடுமாறன், புன்னகையுடன் பேசி காரியங்கள் அனைத்தையும் செய்து தரும் சகோதரர் இளங்கோவன், இந்த கட்டுரை விடயத்தை அருணகிரி அண்ணன் முகநூலில் தெரிவித்ததும் "எழுத்தாளராக வாழ்த்துக்கள்" என்று முதன் முதலில் வாழ்த்திய மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன், தாய்லாந்து பவள க்கல் வணிகம் பற்றி எழுதி, என் கட்டுரைக்கு முன்னோட்டமாக இருந்த மயிலாடுதுறை மாணிக்கம் கருணா, நல்லு லிங்கம் ஆகியோருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment