மயிலாடுதுறையில் நாகை மாவட்ட இணையதள அணி நண்பர்கள் கூட்டம் நேற்று 15-11-2015 ஜாயிற்றுகிழமை நடந்தது. இதில் பாசதலைவர் வைகோ அவர்களின் அன்பு தாயார் அன்னை மாரியம்மாள் நினைவாக பட திறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து இணையதள அணியினர், வீரத்தாய் வை. மாரியம்மாள் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
விடாமல் பெய்த கடுமையான மழையிலும் வருகை தந்த தோழர்களை அன்பு சகோதரர் கருணா ஜிஎஸ் எம் வரவேற்றார்.
நாகை மாவட்ட இணையதள அணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் மாவட்ட கழக செயலாளர் மோகன் அவர்கள். மேலும் இந்த நிகழ்வில்
மாநில நிர்வாகிகள் மார்கோனி, ஆசைதம்பி , நகர செயலர் மார்க்கெட் கணேசன் , ஒன்றிய செயலர் செல்வம், இணையதள அணி செம்பை விஜயன் , ஜனா மற்றும் பல இணையதள அணியினர் கலந்துகொண்டு அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment