இன்று தேசியத்தலைவரின் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு அதிகாலையிலே ,சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேய்லண்ட் "ஈழ ஆதரவு தமிழுணர்வு இயக்கம்" சார்பில் தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா இனமான இயக்குநர் அய்யா புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அசோக் லேய்லண்ட் நுழைவாயிலில் தலைவர் இனிப்புகளை அங்கு பணிபுரியும் தோழர்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் இயக்க அரிமா அண்ணன் எழிலரசன்,கத்திவாக்கம் நகரச் செயலாளர் இராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment