திருப்பூர் மாவட்டத்தில் கார்மன்ட் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர் அன்பிற்குரிய சகோதரர் அருள் பிரகாஷ் அவர்கள். வைகோவின் வாய்மொழிக்கேற்ப வலிப்புலியாய் வலம் வருகிறார். தலைவர் வைகோவின் மீதான தீராத பற்றுதலால் தலைவரின் எண்ணங்களை கொள்கைகளை ஈர்த்தவர். பல கொடைகளை பலருக்கு அளித்துள்ளார். ஆனால் இதுவரை உலகிற்கு தெரியாமலே இருந்துள்ளது. இடக்கை கொடுப்பதை வலக்கை அறியாவண்ணம் இருக்க வேண்டுமென்று, தன்னை முன்னிறுத்தும் விளம்பரத்தை தவிர்த்து உதவிகரம் நீட்டும் கொடை வள்ளல். பெயருக்கேற்ற பிரகாசத்தோடு கொடை கொடுக்கும் அருள் கொண்டவர்.
கடந்த ஆண்டில் தமிழர்களுக்காக அனுதினமும் போராடிக்கொண்டிருக்கும் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் தனது மண வாழக்கையில் பிரவேசித்தவர். அந்த வாழ்க்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அவருக்கு மகிழ்யா என்ற அன்பு புதல்வி பெற்றெறுத்தவர்.
திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரத்தில் உள்ள புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதி இல்லாததை அறிந்த அண்ணன், கழகமே கண்ணாக போற்றும் பழ. கெளதமன் அவர்கள், நேற்று காலை 11 மணி அளவில், அந்த பள்ளியை சார்ந்த மூன்று ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு கொடை வள்ளல் அருள் பிரகாஷ் அவர்கள் அலுவலகம் சென்று புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது என்று சொல்லி உங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
சகோதரர் அருள் பிரகாஷ் அவர்களும் அந்த பள்ளிக்கு சென்று பார்வையிட்டு முக்கியமான வற்றை வாங்கி கொடுக்க தீர்மானித்தார். அப்போது பார்வையிடும் வேளையில் ஒரே ஒரு மின் விசிறி இருந்ததை கண்டு மனம் உருகியவராக, அதிலும் அந்த மின் விசிறியை ஒரு கட்சி கொடுத்துள்ளது. குறிப்பாக அந்த மின் விசிறியில் கட்சியின் பெயரை பெரிய எழுத்துக்களாக பொறித்துள்ளனர். இதை பார்த்தவர் படிக்கும் குழந்தைகளுக்கு கணிணி அறிவை வளர்க்கும் பொருட்டு computer,printer with scanner,ups மற்றும் அதற்குரிய மேஜை போன்ற அனைத்து பொருட்களையும் அடுத்த நாளான இன்று காலை 11 மணிக்கு அந்த பள்ளிக்கு திருப்பூர் மதிமுக இணையதள அணி சார்பில் அன்பளித்து மதிமுகவிற்கு பெருமை சேர்த்தார்.
இதே போல கடந்த ஆண்டும், குழந்தைகள் தரையில் அமர்ந்து எழுதவும், வரையும் உகந்த வட்ட வடிவமாக உள்ள 20 மேஜைகளையும் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்டி மாரியப்பன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், விசுவாசத்திற்கு இலக்கணம் கிருட்டினன் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கு அன்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவைதான் மதிமுக இணையதள் நண்பர்கள் மூலமாக அவரை பாராட்டும் பொருட்டு உலகிற்கு தெரிந்தவை. ஆனால் அவர் கொடுத்த கொடையோ ஏராளம்.
தன் சொந்த சந்தாசத்தை விட்டு பிறர் சந்தோசப்பட தனக்கான சொந்த வீட்டை கூட கட்டவில்லை. காமராஜர் கக்கனை விட மிஞ்சியவரல்லவா இவர். இவர் கொடையுள்ளம் பாராட்டப்படவேண்டும். திருப்பூர் மதிமுக இணையதள அணியில் இருக்கும் இவர், சாதாரண மதிமுக தொண்டர். இவர் பணி சிறக்கவும் கொடையுள்ளம் தொடரவும், தனக்கென்று ஒரு மனையை அமைக்கவும் ஓமன் மதிமுக இணையதள அணி மனதாரா பாராட்டி வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த நிகழ்வில், கொடையளித்த அருள் பிரகாஷ், திருப்பூர் மதிமுக இணையதள அணியின், செந்தில், செல்வராஜ், பிரியா கார்மென்ட்ஸ் செந்தில், மாணிக்கவாசகம் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்,
அருமையான பதிவு...வாழ்க வளமுடன் அருள்பிரகாஷ் குடும்பத்தினர்கள்...
ReplyDeleteஅருமையான பதிவு...வாழ்க வளமுடன் அருள்பிரகாஷ் குடும்பத்தினர்கள்...
ReplyDelete