மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று 16-11-2015, சென்னை ஆயிரம்விளக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள தருமாபுரத்தில் வெள்ள சேதப் பகுதிகளை வீதி வீதியாக பார்வையிட்டு, வெள்ள சேத பாதிப்புகளை கேட்டறிந்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் உங்களோடு இருக்கிறேன் என்றார். அப்போது மக்கள் தலைவரை பார்த்து, எங்கள் வீடுகளுக்கும் வந்து பாருங்கள் என வாஞ்சையாக அழைத்தார்கள்.
அவர்களிடம் பேசிய தலைவர் அவர்கள், நான் வாக்கு கேட்க வரவில்லை.உங்கள் துயரில் பங்கு பெற வந்தேன் என்றார். ஆறுதலுடன் எல்லோர் இல்லங்களுக்குள்ளும் சென்று பார்த்த தலைவர் வைகோ அவர்களை கட்சி வித்தியாசம் ஏதுமின்றி பொதுமக்கள் வரவேற்றார்கள்.
பாதிக்கப்பட்ட எங்களை இதுவரை யாருமே வந்து பார்க்கவில்லை. நீங்களாவது வந்தீர்களே! என பெருமையுடன் மகிழ்ந்து, தலைவர் வைகோ அவர்களுக்கு சால்வை அணிவித்தனர் பொதுமக்கள்.
சென்னை துறைமுகம் பகுதி தீவுத்திடலில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று டபரா மதிய உணவு மகளிரணி சார்பில் வழங்கப்பட்டதை தலைவர் வைகோவிடம் தெரிவித்தார் மாநில மகளரணி துணை செயலாளர் அக்கா மல்லிகா தயாளன் அவர்கள்.
வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் வீதி வீதியாக சென்ற போது, தொண்டனின் கடையில் தேநீர் அருந்தினார் எளிமை குணம் கொண்ட ஒருபெருந்தலைவர் வைகோ.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு ஆறூதல் கூறி நிவாரணம் வழங்கிய இந்த நிகழ்வில், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். உடன் ஆயிரம் விளக்குப் பகுதிப் பொறுப்பாளர் டி.ஜெ.தங்கவேலு, மாமன்ற முன்னாள் உறுப்பினர் திராவிட நாடு முனுசாமி, கேபிள் டி.வி.ராஜா, தர்மாபுரம் அசோக், மு.மாயன், சுரேஷ் அப்பன் துரை, கொளத்தூர் பகுதி செயலாளர் அண்ணன் ஜி.ஆர்.பி.ஞானம், அண்ணன் மார்க்கோனி, மதிமுக இணையதள அணி அம்மாபேட்டை கருணாகரன் உள்ளட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment