Monday, November 16, 2015

நவம்பர் 19 ஆம் தேதி மலேசியா செல்கிறார் தமிழின முதல்வர் வைகோ!

இலங்கை தீவின் தமிழீழ பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றி இருக்கின்ற

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்மானத்தின் மீதான தேசிய கருத்தரங்கில்
தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்கிறார்கள்.


இந்த தேசிய கருத்தரங்கு வரும் 21-11-2015 ல் மலேசிய நாட்டின் பினாங்கு மா நகரில் அதன் துணை முதல்வர் ஐயா திரு.ராமசாமி அவர்கள் தலைமையில் நடக்க இருக்கிறது. தமிழின முதல்வர் வைகோ அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

இதற்காக வருகிற வியாழன் 19 ஆம் தேதி காலையில் சென்னையில் இருந்து மலேசியா பயணப்படுகிறார் தலைவர் வைகோ அவர்கள். தலைவரின் பயணம் சிறக்க ஓமன் மதிமுக இணையதள அணி மனதார மகிழ்ச்சியடைகிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment