தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர், சமாதானப் புறா, சிரித்த முகமே அடையாளமாக கொண்ட மாவீரர், பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படை அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் இன்று 02-11-2015 மாலை நடைபெற்றது.
தலைவா் வைகோ, புலவர் புலமை பித்தன் உள்ளிட்ட தமிழியக்க உணர்வாளர்கள் தமிழ்செல்வன், தமிழினி ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
தமிழீழ விடியலுக்காகவே தன் வாழ்நாளெல்லாம் எழுத்தால்,பேச்சால் பாடுபட்டு வருகின்ற இனமான இனத்தின் விடியலைப் பறைசாற்றும் விதயமாக உணர்ச்சிக் காவியங்களைப் படைத்த இனமான இயக்குனர், புகழேந்தி தங்கராஜ் அவர்கள், ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தலைவர், கவிஞர் புலமைப்பித்தன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா, திரு.ஆவல் கணேசன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அற்புதமான நிகழ்ச்சியில்,நிகழ்வின் இறுதியில் அந்த மாவீரர்களுக்கு மதிமுக இணையதள அணியினர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
செய்தி: தீபன், கார்த்திக், கருணாகரன்
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment