இந்தியாவில் முதல்முறையாக அதி நவீன தொழில்நுட்பத்துடன் "பம்பரம் தொலைக்காட்சி" என்கிற இணைய தொலைக்காட்சி விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இணையதள தொலைக்காட்சியானது மறுமலர்ச்சி திராவிட கழகம் சார்ந்த அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். அனைத்து பொதுக்கூட்டங்கள், நேர்காணல்கள், செய்தியாளர்கள் சந்திப்புகள் மற்றும் பல கழகம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
இந்த முயற்ச்சிக்கு வித்திட்ட ஓமன் மதிமுக இணையதள அணியின் அடிநாதம் அன்பிற்குரிய அண்ணன் சீனிவாசகம் மற்றும் மதிமுக நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய மூளையாக செயல்பட்ட சவுதி அரேபியா இணையதள அணியின் குரு அவர்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இணையதள தொலைக்காட்சியானது பல துல்லியமான தொழில்நுட்ப கருவிகளால் ஒளிபரப்பப்படுகிறது. நேரலை நிகழ்ச்சிகளை முதலில் கையாண்ட திருப்பூர் மாவட்ட மதிமுக இணையதள அணியினரும் இதில் முக்கிய பங்காற்ற உள்ளதால் அவர்களுக்கும், ஏனைய இணையதள நண்பர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இந்த இணையதள தொலைக்காட்சியை உலகம் அறிய செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த "பம்பரம் தொலைக்காட்சி" என்ற இணையதள தொலைக்காட்சியானது, www.pambaramtv.com என்கிற இணைய முகவரி வாயிலாக இணைய உலகில் "இணையதளங்களின் இதய குரலாக" சுழல வருகிறது.
இணையதள அணி நண்பர்களால் முன்னெடுக்கும் இந்த தொலக்காட்சியானது தமிழின முதல்வர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பொற்கரங்களால் மிக விரைவில் முதலில் ஒளிபரப்பப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மூலை முடுக்கெல்லாம் பம்பரம் தொலைக்காட்சியை ஒளிர வைப்போம். உலகிற்கு வைகோவின் சாதனைகளை உணர வைப்போம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
Superb... :)
ReplyDelete