எழுச்சியை கண்டு வெற்றி கண்டது "திருவண்ணாமலை மாவட்ட இணையதள கூட்டம்". இயற்க்கை ஒரு புறம் மழை, காற்று வீச, மறு புறம் இயற்க்கைக்கு சவாலாக திட்டமிட்ட படி இணைய தள கூட்டத்திற்கு இணைந்த, புரட்சி புயலின் "திருவண்ணாமலை மாவட்ட வரி புலிகளின் கூட்டம்" ..
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் "தீனன்" கூட்டத்தின் தலைமையை முன் மொழிய, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் "ஸ்ரீனிவாசன்" வழிமொழிய, தொடங்கிய "திருவண்ணாமலை மாவட்ட இனையதள கூட்டம்", அன்னை மாரியம்மாளின் மலர் அஞ்சலியுடன் ஆரம்பித்தது.
முன்னிலை அண்ணன் கராத்தே பாலு யும், மாவட்ட செயலாளர் "அண்ணன் ராஜா" சிறப்புரையாக கொண்டு சிறப்பான வெற்றி கண்டது "திருவண்ணாமலை மாவட்ட இணையதள அணி கூட்டம்".
கூட்டத்தின் சிறப்பு அம்சங்களும் அணைத்து பேச்சுரைகளின் சுருக்கமும், பின் வருமாறு!!!
1. "முகமது அஸ்கர் அலி" நமது கழகத்தின் இணையதள கூட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார்!!
2. இனையதளம் மூலம் "திருவண்ணாமலை மாவட்ட மதிமுக" நன்னிலை பெற பாடு பட வேண்டும் !!
3. இணையதளம் மூலம் நமது கழகம் சிறப்படைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தனிப்பட்ட விருப்பு,வெறுப்பை கழக செயல்பாடுகளில் கலந்து மனகசப்பு ஏற்படாது கழக தோழமைகள் பயணிக்க வேண்டும்.
4. தலைவன் கடந்து வந்த பாதையை நன்கு அறிந்து கழகத்திற்கு பாடுபட இணைய தள அணிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு ராஜா மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் "திரு தீனன்" அவர்கள் பேசுகையில், திருவண்ணாமலை இணைய தள அணியை பாராட்டியதோடு, களப்பணிகள் மேம்பட "இணைய தள அணி" முன் வரவேண்டும், துண்டு பிரசூரம் மூலம் மாணவர்களை கழகத்தில் இணைக்க வேண்டும். தன்னால் இயன்ற அளவு புது உறுப்பினர்களை கழகத்தில் இணைக்க பாடுபட வேண்டும். இந்த இணைய தள கூட்டம் போல் குறைந்தது 45 நாட்களுக்கு ஒரு முறையாவது இணையதள அணி ஆனாது கூடி கருத்துகளை பரிமாறி "கள பணிக்கு" தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
செய்தி: ஜனார்த்தனன்-திருவண்ணாமலை மாவட்ட மதிமுக
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment