யானைகவுனி ஜெட்காபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இடத்திற்கே சென்று துறைமுகப் பகுதி மதிமுகவினர் 17-11-2015 இன்று மதிய உணவு வழங்கினார்கள்.
இந்த மதிய உணவிற்கான ஏற்ப்பாட்டை, மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் அண்ணன் முராத் புகாரி அவர்கள் செய்திருந்தார்கள். மாநில மகளிரணி துணைச் செயலாளர் அக்கா மல்லிகா தயாளன், அவர்கள் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் அண்ணன் ரெட்சன் அம்பிகாபதி அவர்கள் முன்னிலையில் மதிய உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி உதவியில் துறைமுகபகுதி மதிமுகவின் திரு.தென்றல் நிசார், அண்ணன் Mள்F ஜார்ஜ், பகுதி செயலாளர்கள் மற்றும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment