'எங்கள் வீரத்தாயி[மாரியம்மவு]க்கு இன்று [12/11/15] ''ஈமகிரிகி'' யயை நடைபெறுகிறது. அனைவரும் அதில் கலந்து கொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்துமாறு தாழ்மையுடன் ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
வீரத்தாய் உன்னிடமிருந்து பண்புகள் பலவற்றையும் கற்றுக்கொண்ட இந்த எளியவன் (சுபா. வெங்கட்ராமன்) உனக்கெழுதும் ஓர் சிறிய புகழஞ்சலி''
''சீரும்,சிறப்பும்.......ஈரமும், வீரமும்'',...
''செல்வமும்,செருக்கும்,.... பண்பும்,பாசமும்'',...
''அன்பும், அரவணைப்பும்,.... தியாகமும்,துணிவும்''......
நிறைந்த உன் வயிற்றில் பிறந்ததினால் மகனு[வைகோவு]க்கு பேரும், பெருமையும், புகழும் கிடைத்தது''.....!!!
''அன்பும்,பண்பும், பணிவும்,துணிவும்''......
''வீரமும், [வி]வேகமும்,......
"அறிவாற்றலும், பேச்சாற்றலும்''.........
''வசீகரத்தையும், வாழ்த்துகளையும்''......
''நேர்மையும், ஒழுக்கமும்''......
என்று அத்தனையையும் ஒருங்கே பெற்று ஓயாமல் உருண்டும், புரண்டும் ஒட்டு மொத்த தமிழகத்திற்க்கும், ஒட்டு மொத்த தமிழர்களுக்கும்''...... குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மகனால் தாயி[மாரியம்மாவு]க்கு பேரும், பெருமையும், புகழும் கிடைத்தது''.....!!!
''செல்வமும், சீரும், சிறப்பும் ஒருங்கே பெற்றாலும்''............
''தன் நற்பண்பாலும் சொல்லாலும், செயலாலும் கடைசிவரை நல்ல பெயரெடுத்த உன்னாலும், உன் குடும்பத்தினராலும்'' ''உங்கள் மகன்கள் இருவரின் தீரத்தாலும் ,தியாகத்தாலும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மத்தியில் எனக்கும், எங்கள் மக்களுக்கும் என் ஊரு[கலிங்கப்பட்டி]க்கும் பேரும்,பெருமையும், புகழும் கிடைத்தது''.....!!!
''நீ இன்று எங்களை தவிக்க விட்டுவிட்டு வெகுதூரத்திற்க்கு சென்று விட்டாலும் உன்அருமையையும்,பெருமையையும் பற்றி உன் புகழ் பாடுவோம்''...!!!
''எங்களுக்கு உயிருள்ள வரை உன் புகழ் பற்றி பேசுவோம்''...!!! ''வானில் மின்னி மிதக்கும் பல கோடி நட்சேத்திரங்களுக்கு மத்தியில் நீ ஒரு துருவ நட்சேத்திரமாக இருந்து எங்களையும் எங்கள் ஊர் மக்களையும் காத்தருளும்படி கேட்டுக் கொண்டு உனக்கொரு வீர வணக்கம்''...!!!
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment