மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் நவம்பர் 6 ஆம் தேதி மரணமடைந்தார். இதையொட்டி குவைத் மதிமுக வைகோ பாசறையினர் அன்னை மாரியம்மாளுக்கு இரங்கல் நிகழ்ச்சி நடத்தினர்.
கலிங்கப்பட்டியில் முழு மதுவிலக்கு வேண்டி போர்பணி புரிந்த, வீரத்தின் விளைநிலம் வீரத்தாய் திருமதி மாரியம்மாள் அவர்களுக்கு "கண்ணீர் அஞ்சலி" கூட்டமும், மெளன அஞ்சலியும், குவைத் மிர்காப் நகரில் உள்ள தஞ்சாவூர் உணவகத்தில் 06.11.2015. இரவு 08.00 மணியளவில் நடைபெற்றது.
அதில் பெரியார் நூலகத்தின் தோழர்கள், மற்றும் காயிதமில்லத் பேரவையின் தோழர்கள், கலந்துக்கொண்டு தன் இரங்கல் அனுதாபங்களை பதிவுசெய்தார்கள். மதிமுக இணையதள அணி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment