தமிழீழ ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாவீரர் நாள் ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் நாள் மாலை 6.15 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதிமுகவின் சார்பில், பெரவள்ளூர் சதுக்கம், காமராஜர் சிலை பின்புறம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் (கொளத்தூர் பகுதி. வடசென்னை மாவட்டம்) ல் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் நாளை நினைவு கூர்ந்து அவர்களின் இலட்சியமான தமிழீழ தாயகத்தை வென்றெடுக்க உறுதியேற்கவேண்டி ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment