வைகோவின் தாயார் மாரியம்மாள் ஈமச் சாம்பல் முக்கடல் சங்கமத்தில் கரைப்பு
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் கடந்த 06.11.2015 வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார்.
மறுநாள் 07.11.2015 சனிக்கிழமை கலிங்கப்பட்டியில் உள்ள பொது மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, வைகோ மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று பகல் 12 மணி அளவில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மாரியம்மாள் ஈமச் சாம்பலை கரைத்தனர்.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தோழர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment