இலங்கையின் மனித உரிமைகள் கருத்து அரங்கம் இன்று காலை மலேசிய நேரப்படி சரியாக 9 மணிக்குத் தொடங்கியது. தமிழ் ஈழம் அமையப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைப் போல, பினாங்கு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று துவக்க உரையாற்றிய தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக பினாங்கு மாநிலத் துணை முதல்வர் ராமசாமி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தமிழீழம் அமைய அனைத்து நாடுகளும் பொது வாக்கெடுப்புக்கு தீர்மானம் நிறைவேற்றும். வைகோவின் காலம் தமிழீழ வல்லரசாக மாறும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment