தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்த நாளான 26-11-2015 இன்று ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
தலைவர் வைகோ மற்றும் நிர்வாகிகள் வந்தனர். பின்னர், தலைவர் வைகோ அவர்கள் சர்க்கரைப்பொங்கல் மற்றும் இனிப்புகளை பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கு வழங்கினார்கள்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், சிங்கள ராணுவமும் போலீசும் தமிழர் பகுதிகளில் வெளியேற வேண்டும். சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அனைத்து நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடத்திலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அரசு ஜனநாயகத்தை மதிப்பதில்லை, நாளை மாவீரர் நாள் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, உயர்நீதி மன்றத்தை நாடி உள்ளோம் என பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment