மத்திய சென்னை, ஆயிரம் விளக்கு பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு நமசிவாயபுரம், சேத்துப்பட்டு அப்பாசாமி புறம், அஜிஸ் நகர், திடிர் நகர், ரங்கூன் தெரு, ஆகிய பகுதிகள் தொடர் மழையால் பாதிக்க பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களை ம.தி.மு.க வின் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி அவர்கள் பார்வையிட்டார். அந்த பகுதி மக்கள் அனைவரின் வீடுகளில் தெரிவில் சாக்கடை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்படிபட்ட அபாயகரமான சூழலிலும், மதிமுக வின் ரெட்சன் அம்பிகாபதி அந்த சாக்கடை கலந்த மழை நீரில் நடந்து சென்று ஆறுதல் தெரிவித்து அங்கு வசிபவர்களுக்கு மதிய உணவை தன் சொந்த செலவில் வழங்கினார்.
எனவே தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், உத்தரவோடு மட்டும் நில்லாமல் செயலாற்றவும் அதிகாரிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஓமன் மதிமுக இணையதள அணி கேட்டுக்கொள்கிறது.
இந்த நிவாரண நிகழ்வில், ஆயிரம் விளக்கு பகுதிச்செயலாளர் T.J.தங்கவேலு, மற்றும் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment