நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கொட்டும் மழையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை, அடிமை ஆட்சியின் காவல்துறை அடித்து துன்புறுத்தியது.
மக்களை காக்கவேண்டிய காவல்துறை மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணமோ, குடியிருக்க வேறு இடம் மற்றும் உணவு பொருட்கள் வழங்குவதை விட்டுவிட்டு போராடுகிற மக்களை துன்புறுத்துவது வேத்னைக்குரியது.
மழை வெள்ளத்தால் குடும்பங்களில் உள்ள குழந்தைகள், வயது முதியவர்கள் வேறு இடத்திற்கு நகர முடியாமலும், அதே மழை வெள்ளத்தால் தொற்றுநோய்கள் பரவும் சூழ்நிலை இருப்பதாலும் கவலைபடும் குடும்பங்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதை ஆறுதல் கூறி நிவாரணம் வழங்காமல் அடித்து துன்புறுத்தியிருக்கிறது. மக்களே வேதனையில் இருக்கும்போது அவர்களை ஜெயலலிதாவின் அடிமை ஆட்சியின் காவல்துறையினர் தாக்கியிருப்பது அரசின் அராஜக போக்கையே காட்டுகிறது.
இந்த காட்டுமிராண்டி அரசின் காவல்துறைய ஓமன் மதிமுக இணையதள அணி வன்மையாக கண்டிப்பதோடு, நெல்லை சமாதானபுரம் மக்களுக்கு தங்குமிடமும், உணவும், கழிப்பிடம் மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகளையும், மருத்துவ வசதிகள் போன்ற அன்றாட தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறவேற்றி பொதுமக்களின் கண்ணீரை துடைக்க பாடுபட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment