இலங்கை தீவில் இரண்டு இனங்கள் வாழ்கின்றன. ஒன்று தமிழினம், மற்றொன்று சிங்களம், தமிழின பகுதி தமிழீழ நாடாகும். அந்த தமிழீழத்தில்தான் சிங்களவர்களின் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்று தமிழர்களை உலகறிய செய்தவர்தான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கொண்டிராத முப்படைகளான, ராணுவ படை யான விடுதலைபுலிகள், கடற்படையான கடற்புலிகள், வான்படையான வான்புலிகளோடு நான்காவது படையாக கரும்புலிகள் படையையும் உருவாக்கிய புகழ் மிக்க தலைவன் பிரபாகரன்.
சிங்கள தேசத்திலிருந்து அடிமைப்பட்டிருந்த மக்களை விடுவித்து தலை நிமிர்ந்து வாழ வைத்த தெய்வம்தான் பிரபாகரன் என்று அனைத்துலக தமிழ் மக்களாலும் போற்றப்படுபவர். தமிழினத்திற்கான நாட்டை சிங்களவர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி, கொடுமையான சித்திரவதை பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்த வேளையில் ஒரு கை துப்பாக்கியுடன் தனது சகாக்களுடன் வன்னிக்காட்டிற்கு சென்று சிங்கள ராணுவத்திற்கு எதிராக போராட தொடங்கியவர்தான் பிரபாகரன் அவர்கள். பின்னாளில் சகாக்கள் கொண்ட அணியை படையாக பெருக்கினார். படைகளுக்கு பெயரிட்டார்.
உலகிலே எந்த இயக்கமும் பெற்றிராத முப்படைகளை அமைத்து தானே கண்காணித்தார். உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றார். தமிழீழ மக்களுக்கான தனி தமிழீழ அரசாங்கத்தை அமைத்து அரசியல், நிதிதுறை, நீதி துறை, போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, சிறார் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் ஏராளமான ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கி தனி நாடாக செயல் வடிவம் கொடுத்து இயக்கி காட்டி உஅலகையே திரும்பி பர்க்க வைத்த மாவீரன் பிரபாகரன்.
தமிழீழத்திற்கான போர்க்கருவிகளை ராணுவமே தயாரிக்கவும், நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவும் வீரர்களை திறமையானவர்களாக உருவாக்கினார். அனைத்து போர் படைகளுக்கும் தனி சீருடை மற்றும் பயிற்ச்சிகள் வழங்கினார். படைகளுக்கு தமிழிலே பயிற்ச்சிகளை வழங்கி தமிழை பேணி காத்தார்.
தமிழீழத்தில் யார் வேண்டுமானாலும் எந்த நடுநிசை நேரத்திலும் பாதுகாப்பாக சென்று வர முடியும் என்ற நிலையை கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தினார். மது இல்லா நாடாக கட்டமைத்திருந்தார். 12 கோடி மக்களுக்கான தமிழர் தேசமாக தமிழீழத்தை கட்டமைத்தார்.
கலை இலக்கியம், பொறியியல் போன்ற அனைத்திலும் தமிழீழ மக்கள் சிறந்து விளங்கவேண்டுமென்று அனைத்து துறைகளையும் மேம்படுத்தினார். தமிழீழ நாடு அமைதியின் உருவாக உருவெடுத்து தனி நாடாக உருவாகும் அனைத்து சாத்திய கூறுகளையும் உருவாக்கினார் பிரபாகரன்.
ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ புலிக்கொடி பறக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில் பொறுக்க முடியாத சிங்கள படை பிரபாகரனின் விடுதலைபுலிகளோடு தனியாக போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து, உலக நாடுகளை துணைக்கு அழைத்து தமிழர்களை படுகொலை செய்து, திட்டமிட்டு சிறார்களையும், சிசுக்களையும் கொன்று தமிழினத்தையே அழித்தது. இது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையாகும். தமிழீழ ராணுவமான விடுதலைப்புலிகளான தமிழீழ தமிழர்கள் போர்க்களத்தில் வீழ்ந்திருந்தாலும், அவர்களுடைய போராட்ட குணம் சற்றும் குறையாமல் இன்னும் வேகமாக கூடுதலாகவே இருக்கிறது. போராட்ட வடிவம் மட்டுமே மாறி இருந்தாலும், இலட்சியத்தில் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
உலக தமிழர்களை உலகமே போற்றும் அளவிற்கு தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிய மாவீரன் பிரபாகரன் அவர்களின் இன்றைய பிறந்த நாளில் அவருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நேரடியாக வாழ்த்து சொல்ல முடியாமல் போனாலும், தமிழர்களாகிய நாம் அனைவரும் பிரபாகரன் பிறந்த நாளை "தமிழர்களின் விடுதலை நாளாக" கொண்டாடுவோம். ஒற்றுமையுடனும், தமிழீழ மண்ணை வென்றெடுக்கவும் இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழீழம் மலரும் நாளில் தமிழர்கள் ஐநாவில் பதவிகளில் அலங்கரிப்பார்கள் என்பது சாத்தியமாகும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். தமிழீழ புலிக்கொடி ஐநாவில் பறக்கும் நாள் வெகு விரைவில் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். "தமிழீழ குடியரசை" வென்றெடுப்போம்.
"தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்"
பட உதவி: கமல் பிரியன்
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment