தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மதிப்பிற்குரிய தலைவரான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய மூத்த மகள் மேரி வசந்தா ராணி அவர்கள் உடல்நலக்குறைவால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த சகோதரியின் மறைவால் துயரத்தில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சமுதாய மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment