உலகம் போற்றும் ஒரு பெருமகனை பெற்றெடுத்து நாட்டிற்கு கொடையளித்த வீரத்தாய் மாரியம்மாள் அவர்கள் தனது 98 ஆவது வயதில் நூற்றாண்டை எட்டும் வரை நலமாக அனைத்து சுக துக்கங்களை கடந்து வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்.
அவர்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மமாள். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில்வசித்து வந்தார்.அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பாளையங்கோட்டை தென்றல்நகரில் உள்ள வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.நேற்று முன்தினம் இரவில் அவருக்கு திடீர் என்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பாளையங்கோட்டையில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில்அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மரணம்நேற்று காலையில் மாரியம்மாளுக்கு மீண்டும் மூச்சு திணறல் அதிகமானது. உடனே அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போக, அவர் நேற்று 06-11-2015 வெள்ளி காலை 9.15 மணி அளவில் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்ததுமே கழகத்தின் கண்மணிகள் செய்வதறியாது திகைத்தோம். கலிங்கப்பட்டி அகோ இல்லத்தில் உங்கள் அழைப்புகள், உபசரிப்புகள் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படிபட்ட போற்றுதலுக்குரிய தாயின் உடல், இன்று 07-11-2015 சனிக்கிழமை சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அனைத்து சாதியினருக்கும் பொதுவான இடத்திற்கு கலிங்கப்பட்டி வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 1 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.
இவர்களுக்கு ராஜலட்சுமி, சரோஜாதேவி, தேவராணி ஆகிய 3 மகள்களும், வைகோ, ரவிச்சந்திரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மாரியம்மாள் அவர்களின் மரண செய்தியை அறிந்து உள்ளூர் பிரமுகர்கள் வந்து மாரியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று முன்தினம் வைகோ டெல்லியில் இருந்தார். அவரிடம் தம்பி ரவிச்சந்திரன், தாயார் மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விவரத்தை தெரிவித்தார். உடனே அவர்டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். இதற்கிடையே தாயார் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் பாளையங்கோட்டைக்கு வந்து, நேரடியாக ஆஸ்பத்திரிக்கு காலை 10.50 மணிக்கு சென்றார். தனது தாயார் மாரியம்மாளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து மாரியம்மாளின் உடல் நேற்று காலை 11.10 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து கலிங்கப்பட்டிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து ஆம்புலன்ஸ் வேனுக்கு தனது தாயாரின் உடலை ஸ்டெச்சர் வண்டி மூலம் வைகோ தள்ளிக்கொண்டு வந்தார். ஆம்புலன்சில் உடலை ஏற்றிக்கொண்டு, அதே ஆம்புலன்ஸ் வேனில் வைகோவும், உறவினர்களும் கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டில் மாரியம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மதிமுக. திமுக, தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பொது மக்கள் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
வைகோவின் தாயார் மாரியம்மாள் அவர்கள், அரசியல் மற்றும் சமூக பணியில் அதிக ஆர்வம் உடையவர். சமீபத்தில் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாரதீய ஜனதாதலைவர் தமிழிசை சவுந்திராஜன், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மலேசிய துணை முதல்வர் ராமசாமி, முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் அவரதுவீட்டிற்கு சென்று மாரியம்மாளை சந்தித்து இருக்கிறார்கள்.
கலிங்கப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியான மகாதேவன்பட்டி, சத்திரப்பட்டி, திருவேங்கடம், குருவிகுளம், குலசேகரப்பேரி, சங்கரன்கோவில், கரிசல்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வைகோவின்வீட்டிற்கு வந்து, மாரியம்மாளின் உடலுக்குஅஞ்சலி செலுத்தினார்கள்.
வைகோவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய செயலாளர் டி.ராஜா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் முக ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், செந்தமிழன் சிமான், தமீமுன் அன்சாரி, ஹைதர் அலி, கிருஷ்ணசாமி, வெள்ளையன், கொளத்தூர் மணி, ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயகாந்தின் மைத்துனஎ சுதீஷ், நக்கீரன் கோபால், தங்கம் தென்னரசு, சசிபெருமான் மகன் மற்றும் குடும்பத்தினர், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், சங்கரன்கோவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்து செல்வி, ம.நடராசன், திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரடியாக கலிங்கப்பட்டி சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment