தமிழர் நலன் காக்கும் இந்த இயக்கம் உருவாக கருவாக இருந்த கரூர் மாவட்ட அரவக்குறிச்சி ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி சார்பில், நமது கழக ஒன்றியச் செயலாளர் அண்ணன் கலையரசன் தலைமையில் அரவக்குறிச்சி புங்கம்பாடி பேருந்து நிறுத்ததிற்கு அருகில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
மேலும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்,மாவட்டக் கண்காணிப்பாளர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் Nov 19 அன்று மதுபானக் கடை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தியாகி சசி பெருமாள், அன்னை மாரியம்மாள் அவர்களின் எண்ணங்களும், தியாகங்களும் நிறைவேற நாம் போராட்டத்தை வீரியமாக முன்னெடுப்போ. முடித்துக்காட்டுவோம். மக்கள் நலக் கூட்டணி மாத்திரமே, தமிழர்களின் பாதுகாப்பு அரண் என்பதை உரக்க சொல்வோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment