கரூர் கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளி அருகில், மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள மறுமலர்ச்சி தி.மு.க மாவட்ட அலுவலகமான கரூர் தாயகத்தில் மாவட்ட அளவிலான இணையதள அணி நண்பர்கள் கூட்டம் 12.11.2015 வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் முன்னதாக தலைவர் வைகோ அவர்களின் அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இணைய நண்பர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
1. கரூர் மாவட்டத்தில் தன்னலமற்று பணியாற்றும் இணைய நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து உத்வேகத்துடன் செயல்படுவது எனவும்,
2. வருகின்ற நவம்பர் 24ம் நாள் கோவையில் நடைபெற உள்ள மக்கள் நல கூட்டியக்க பேரணியில் இணைய நண்பர்கள் திரளாக பங்கேற்பது எனவும்,
3. டிசம்பர் 13ம் நாள் சென்னையில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் வைகோ பங்கேற்க உள்ள மாநில அளவிலான இணைய நண்பர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கும் நண்பர்கள் தங்கள் பெயரை முன்னரே பதிவு செய்து கொண்டு வாகன ஏற்பாட்டிற்கு வசதி செய்து கொள்ள வேண்டும் எனவும்,
4. வருகின்ற 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு 100 நண்பர்கள் களப்பணியாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் சசிகுமார், வழக்கறிஞர்கள் பிரேம்குமார், சரண். பாஸ்கரன், இணைய நண்பர்கள் செந்தில்குமார் வடிவேல், திருமூர்த்தி, முகேஷ் ஈழவன, வீரா. கோபி, அன்பரசன் புயல், வண்டாரிபாளையம் வடிவேல், கார்த்திக் அமுதன், மணிசேகர், அரிமா. பாலு, நவீன்குமார், பழனிவேல், சந்திரன், கதிர்வேல், விமல், விக்னேஷ், விஜயகுமார், மாதவன், வேல்மணி, பால்ராஜ் ஆகியோரும் நிகழ்ச்சி சிறப்புற அரிய ஆலோசனைகளை வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத சாதாரணன் (எ) கௌதமன், ரமேஷ் வேங்கடபதி, நல்லசிவம், பரமத்தி பழனிவேல் ஆகியோருக்கும், கலந்தாய்வு கூட்டம் சிறப்புற நடைபெற ஆலோசனைகளை வழங்கிய கரூர் மாவட்ட பொறுப்பாளர் கபினி. சிதம்பரம், கரூர் நகர கழக பொறுப்பாளரும் ஆசிரியருமான பொத்தனூர் ஈழபாரதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆசை சிவா, மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, கூட்டத்தில் கலந்து கொள்ளாத இயலாத நிலையில் தன் எண்ணத்தை கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த அரவை ஒன்றிய செயலாளர் கோ. கலையரசன், ஏ. ஒன். தங்கவேல், கரூர் ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஏ.கே. பழனிச்சாமி, குடை. சண்முகம், ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் செய்தியாளர் திரு. ஆனந்தகுமார் அவர்களுக்கும், மேலும் கருத்துரை வழங்கிய மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் அன்புத் தம்பி சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் ஓமன் மதிமுக இணையதள அனி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதற்கு ஏற்ப்பாடு செய்த முகேஷ் ஈழவன், செந்தில்குமார் வடிவேல், அன்பரசன் புயல், திருமூர்த்தி, கார்த்திக் அமுதன், மணி சேகர், கருத்துபெட்டகம் அன்புக்குரிய அண்ணன் கரூர் சித்தார்த் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment