Tuesday, November 3, 2015

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுடன் வைகோ சந்திப்பு!

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அவர்களை சண்டிகரில் உள்ள அரசு இல்லத்தில் மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று மாலை சந்தித்து, 2016 பிப்ரவரி 09 இல் நடைபெறும், தமது அரசியல் பொதுவாழ் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். விழாவில் கலந்துகொள்வதாக பாதல் அவர்கள் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு ஒரு மணி நடந்தது.

அங்கிருந்தவாறே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவர்களுடன் அலைபேசியில் தொடர்புகொண்ட வைகோ அவர்கள் அவரையும் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். பரூக் அப்துல்லா அவர்களும் அவசியம் கலந்துள்வதாக உறுதி அளித்தார்.


இந்திய அரசியலை தெரிந்த தலைவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இரு அவைகளிலும் புலி போல பாய்ந்து கேள்விகளை அடுக்கிய தலைவர், நண்பர்களை தன்னகத்தே ஈர்த்துக்கொண்ட தலைவர் ஒரு வார்த்தை கூப்பிட்டால் அனைத்து தலைவர்களும் அவருடன் வரும் நிலையில் இருக்கும் தன்மான தலைவனை, தமிழக மக்கள் அரியணையில் அமர்த்த வேண்டும். பொன்விழாவில் போர்ப்பரணி பாட வேண்டும். ஆட்சியை நமக்கு உரித்தாக சபதம் எடுப்போம்,

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment