மதிமுக இணையதள அணி தோழர்கள் 22-11-2015 இன்று மதியம் 2 மணி அளவில், தலைவர் வைகோவின், வீரத்தாய் மாரியம்மாள் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இணையதள அணி மாநாட்டிற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த புகழஞ்சலியில், மதிமுக மாநில மகளரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன், எழும்பூர் பகுதி செயலாளர் அண்ணன் திரு.தென்றல் நிசார் உரையாற்றிய பின்பு கவிஞர் ரவிச்சந்திரன் அவர்களின் நெகிழ்ச்சியுரையாற்றினார்.
பின்னர், ஈழத்தில் எப்படி அன்னை பார்வதி அம்மாள் புகழ் நிலைக்குமோ அப்படி தமிழகத்தில் அன்னை மாரியம்மாள் புகழ் நிலைத்திருக்கும் என தோழர் பார்த்தசாரதி பாண்டு பேசினார்.
போராளிக்கு என்றும் மறைவில்லை, போராளி விதைதான்,அதுபோன்றே அன்னையின் புகழும் என புகழ்செல்வி பரணி பாவலன் பேசினார். மதுரை இணையதள நண்பர்கள் சார்பாக நிகழ்வில் கலந்து கொண்ட திரு.மதுரை தமிழ் சரவணன் மற்றும் தோழர் கண்ணன் சாதூரப்பன் உரை நிகழ்த்தினார்கள். தோழரகள் கதிரவன் குணா, அயப்பாக்கம் பெருமாள், ஞாபகச் செம்மல் தீபன் பழனிச்சாமி, நல்லு ஆர் லிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment