புதுச்சேரியில் 06.02.2016 ஆம் தேதி மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டபொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுவை மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ மற்றும் தலைவர்கள் புதுச்சேரி ம.ந.கூட்டணியின் இணையதளம், இலச்சினை மற்றும் பதாகையை தொடங்கி வைத்தார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர்களுக்கு ஆளுயர மாலையிட்டு கவுரவிக்கப்பட்டது. மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது. புதுச்சேரியே புதுமைபடும்படியாக மக்கள் வெள்ளத்தில், விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த தேர்தல் பிரச்சார குறைந்த பட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டமானது மாநாடு போல நடந்தது. நிகழ்வுகள் தொடக்கம் முதல் நள்ளிரவு இறுதி வரை பம்பரம் இணையதள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படிருந்தது.
தலைவர்கள் அனைவரும் உனர்ச்சியுரையாற்றினார்கள். மக்கள் தலைவர்களின் பேச்சை கேட்க நள்ளிரவு வரை காத்திருந்தது மாற்றத்திற்கான அடையாளமாகவே தோன்றியது. அனைத்து மக்களும் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்கள் நலக் கூடணிதான் நல்லாட்சி தர முடியும் என காத்திருந்தது வெளிபட்டது.
வரும் காலம் மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்த இப்பொழுதே களம் காண அனைத்து தலைவர்களும் தொண்டர்களை வலியுறுத்தினார்கள்.
No comments:
Post a Comment