மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை 11.30 மணி அளவில் தனியார் விருந்தினர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா - வாழும் கலை அமைப்பின் ஸ்ரீரவிசங்கர்ஜி ஆகியோருடன் சந்தித்து உரையாடினார்.
பின்னர் பரூக் அப்துல்லா அவர்கள் சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் இல்லம் சென்றார். அவரை வைகோ மற்றும் மகன் துரை வையாபுரி மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்றனர். பின்னர் வைகோவுடன் பரூக் அப்துல்லா உரையாடிக்கொண்டிருந்தார்.
வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment