Tuesday, February 23, 2016

அலங்கார தோரணங்களுடன் பொதுக்குழுவிற்கு வருபவர்களை வரவேற்கிறது திருச்சி மதிமுக!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை செஞ்சியாரும், எல்.கணேசனும், கருணாநிதியின் ஆலோசனையின் பேரில் கட்சியை அபகரிக்க முயன்று சேலத்தில் போட்டி பொதுக்குழு ஏற்பாடு செய்தனர்.

ஒன்றியம் வாரியாகச் சென்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேச முயற்சித்தனர். ஆனால் தோழர்களே 1500 பொதுக்குழு உறுப்பினர்களில் 1350 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மதிமுக பொதுச்செயலாளருக்கு ஆதரவளித்தனர். திமுகவினர் கொடுத்த காசை துச்சமென மதித்து, சோதனையான காலகட்டங்களில் மதிமுகவை உடைக்க நினைத்த வியூகத்தை தரைமட்டமாக்கியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாகிய போர் வீரர்கள்.
.
அப்படிப்பட்ட இந்த இயக்கமான மதிமுகவின்ன் இருதயம் போன்றவர்களான பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நாளை காஜா நகர் வி.எஸ்.எம்.மஹாலில், நேரம் காலை 10 மணி முதல் தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் மதிமுக சார்பில் பொதுக் குழுவில் பங்கேற்க்க சொல்லி தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
பொதுக்குழு நடக்கும் வி.எஸ்.எம்.மஹால் அரங்காரங்களால் நிறைந்து காணப்படுகிறது. இன்றைக்கே ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக, நாளை தலைவர்களை வரவேற்க்க காத்திருக்கின்றன.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment