மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது. எங்கு சென்றாலும் மக்கள் மாநாடு போல கூடுகிறார்களே என எண்ண நினைவுக்கு வருவது ஒன்றே. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஊழல் தெரியாதவர்கள், மதுவில்லா மாநிலம் அமைக்க போராடுபவகள். தரமான கல்வி கிடைக்கவும், மருத்துவம் கிடைக்கவும் போராடுகிறவர்கள். அதனால்தான் கோபிச்செட்டி பாளையத்திலும் படையெடுத்தார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டுமென்ற ஏக்கத்திலே கூடியது.
வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவும், திமுகவும் அகல பாதாளத்திற்கு செல்லும் நாள் விரைவில் வரும்.
கோபி செட்டி பாளையம் கூட்டம் பிரமிக்க வைத்தது முன்னேறி சென்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment