மதிமுக உறுப்பினர் கலிங்கப்பட்டி முருகேசன் இல்லத் திருமணத்தில் தலைவர் வைகோ அவர்கள், நெல்லை புற நகர் மாவட்ட பொறுப்பாளர் தி.மு.ராஜேந்திரன்,அவர்களுடன் கலந்துகொண்டார். அப்போது மேள தாளங்கள் முழங்க தலைவரை தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.
மணமகனிடத்தில் தாலி எடுத்து கொடுத்து மேள தாளத்துடன் திருமணத்தை நடத்தி வைத்தார். அவர்கள் நெற்றியில் திலகமிட்டார் வைகோ.
மதிமுக இணையதள அணி சார்பில் நல்லு மற்றும் கவிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.
முருகேசன் திருமணத்துல் பேசிய வைகோ அவர்கள், மணமக்களுக்கு திருக்குறள் பரிசளித்து, இணையத்தில் தோழர்கள் தன்னலமின்றி மக்கள் நலக் கூட்டணிக்காக உழைக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
சென்னை பெருவெள்ளத்தின் போது மணமகன் முருகேசன் தன்னோடு இணைந்து சுத்தம் செய்ததையும் தலைவர் வைகோ நினைவு கூர்ந்து பேசினார்.
பண்பாடு சிதைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன் எனவும் வைகோ பேசினார்.
மணமக்களுடன் வைகோ குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். பினர் இணையதள அணி சார்பில் மணமக்களை இணையதள அணியினர் வாழ்த்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment