இன்று முதல் தொடங்கிய மக்கள் நலக் கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நலக் கூட்டணியின் சின்னங்கள் தாங்கிய, தலைவர்களின் படங்கள் மற்றும் வாசகங்கள் தாங்கிய வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்திலே கடலூரிலிருந்து பிரச்சாரம் தொடங்கி, நாகப்பட்டினத்திலே நிறைவடந்திருக்கிறது.
தேரின் முன்னாலும் பின்னாலும் மக்கள் வெள்ளம் சுழ்ந்து தலைவர்களின் உரைகளை கவனித்தார்கள். மாற்றத்தை விரும்பும் மக்கள் வாக்களித்து வருகிற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகனத்தை மக்கள் நலக் கூட்டணியை விளக்கும் விதமாக வடிவமைத்த ஆருயிர் அண்ணன் அருணகிரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துதலையும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment