இன்று 17-02-2016 காலை நாடளுமன்ற தேர்தலில் நிற்க்கும் போதேல்லாம், வைகோ அவர்களுக்கு மாற்று வேட்பாளராக சுயேட்சை சின்னமான படகு சின்னத்தில் போட்டியிடும், வைகோ அவர்களின் உதவியாளர்,"படகு"கண்ணன் அவர்களின் இல்ல திருமணத்தில், சிவகாசியில் கலந்துகொண்டு மணமக்கள் ஸ்ரீனிவாசன்B.E, கஜலட்சுமி B.E அவர்களை வாழ்த்திவிட்டு அவினாசி அத்திகடவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதமிருக்கிற மக்களை சந்திப்பதற்காக சென்றுகொண்டிருந்த போது மாலை 3:20 மணிக்கு பழனி-உடுமலை சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி சரிந்து கிடந்ததை கண்டார் வைகோ.
மதுரை, பாண்டிச்சேரி வீரராக்கியம், விக்கிரவாண்டி போன்ற இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் ஓடோடி சென்று உதவி செய்து பல உயிர்களை காப்பாற்றிய வைகோ அவர்கள், சரிந்து கிடந்த வாகனத்தை கண்டதும், தனது வாகனத்தை விட்டு இறங்கி சென்று பார்த்த போது இரண்டு வாலிபர்களும் பரிதாபமாக இறந்து கிடந்தனர். இதை பார்த்த வைகோ பதறினார். காப்பாற்றாமல் முடியாமல் முன்னரே இறந்திருந்ததை கண்டு மிகவும் வருந்தினார்.
பின்னர் காவல் துறையும் அந்த இடத்தை வந்தடைந்தது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment