Monday, February 22, 2016

JNU மாணவர் சங்கத் தலைவர் கைதை கண்டித்து, சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து, இராணிமேரி கல்லூரி வரை மனிதச் சங்கிலிப் போராட்டம்!

திங்கள் 22.2.2016 பகல் 12 மணிக்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் டெல்லி JNU மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் கைதைக் கண்டித்தும், தொடர்ந்து மாணவர் விரோத போக்கை கடைப்பிடிக்கும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் அனைத்து மாணவர் அமைப்புகளின் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது.
 
RSS, ABVP காவி கும்பல்களிடமிருந்து, கல்வி வளாகங்களை, இந்திய நாட்டை பாதுகாத்திட!
 
நாளை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம்!
 
மாணவ சமுதாயமே திரண்டு வா....
மாணவர் உரிமையை மீட்டெடுப்போம்...
 
JNU மாணவர் தலைவர் கண்ணையா குமாரை விடுதலை செய்!
 
மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் பங்குபெறும் மாணவ அமைப்புகள்:
 
AISF - அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்,
SFI - இந்திய மாணவர் சங்கம்,
MMM - மறுமலர்ச்சி மாணவர் மன்றம்,
RSF - முற்போக்கு மாணவர் அமைப்பு,
TSM - தமிழ்நாடு மாணவர் இயக்கம்,
AISA - அனைத்திந்திய மாணவர் கழகம்,
AIDSO - அனைத்திந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு,
CFI - campus front of india,
SIO - student Islamic organization,
SYSM - மாணவர் இளைஞர் சமூக இயக்கம்,
STUUNOM - student union university of medras,
த.மா.க - தமிழ்நாடு மாணவர் கழகம்
MUSU - சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் (மாணவர் பிரிவு),
மாணவர் இந்தியா,
DSF - தலித் மாணவர் கூட்டமைப்பு
 
த.குட்டிமணி.B.A.,B.L.,
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி,சென்னை. மற்றும் திருவள்ளூர் மாவட்ட துணை அமைப்பாளர், மறுமலர்ச்சி மாணவர் மன்றம்( MMM)
 
இந்தப் போராட்டத்தில் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாணவர்கள் கழக மாணவர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் காஞ்சி மணவண்ணன் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் சசிக்குமார் தலைமையில் கழகக் கொடியுடன் பங்கேற்பார்கள்.
 
மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள் சேஷன், திருவள்ளூர் சந்தோஷ் நாகை ஆசைத்தம்பி பெரம்பலூர் மணிவண்ணன் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் மாயன் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் அருணாச்சலம் ஆகியோர் ஒருங்கிணைப்பார்கள்.
 
மாணவ கண்மணிகள் திரளாக கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
மணவை தமிழ்மாணிக்கம்,
மதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment