மதிமுக் இளைஞரணி துணை செயலாளர் கொட வள்ளல் அண்ணன் மார்க்கோனி அவர்கள் ஏற்ப்பாட்டில் நடந்த கூட்டமானது மக்கள் சாலைகளெங்கும் காட்சியளித்தனர். தலைவர்களின் சிறப்புரையில் கூடியிருந்த மக்கள் திரளாக திரண்டிருந்தது காவல்துறையை திணறடித்தது.
சீர்காளி தொகுதி எழுச்சியை காணும்போது நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதை உணர்த்துகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். இது மாபெரும் எழுச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது என திருமா பேசினார்.
வைகோ பேசும்போது காந்தியவாதி சசிபெருமாள் மடிந்த போது சகோதரர் திருமாவும் 7 நாட்கள் கழித்து சசிபெருமாள் தூக்கி சென்றோம். அவர் மடிந்த அரை மணி நேரத்தில் அவர் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கு சென்று பார்த்துவிட்டு, பத்திரிகையாளர்களிடத்தில் ஜெயா அரசு இவரை கொலை செய்திருக்கிறது என குற்றம் சாட்டினேன். வழக்கும் தொடர்ந்தேன்.
மதுக்கடைகளை எதிர்த்ததால் சசிபெருமாளை கொலை செய்தீர்கள். ஆனால் இப்போது மக்களுக்காக ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ. 20 தமிழர்கள் கண்ணை துளைத்து, உயிர்தலத்தை அறுத்து கொலை செய்தார்கள். ஜெயலலிதா ஒரு அறிக்கை கூட விடவில்லை. கருணாநிதியும் பேசவில்லை.
சாதியை ஒழிக்க, மக்கள் நலக் கூட்டணி உழைக்கிறது. தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் போராடுவோம். நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுப்போம்.
மக்கள் நலக் கூட்டணி வெறி பெறும். கொள்ளையடித்த மந்திரிகள் சொத்தை பறிமுதல் செய்து மக்களுடமையாக்குவோம். அருமை தம்பிமார்களே உங்கள் உணர்ச்சிகளுக்கு பாராட்டுக்கள். நாம் எதிர்க்க போகிற சக்திகளை தகர்க்க முடியும் என்கிற நம்பிக்கையோடு தெருவில் போய் பேசுங்கள் பொதுமக்களிடம்.
மதுக்கடைகள் மூடவேண்டும். ஊழல் இல்லாத தமிழகம் அமைக்க மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்க வெற்றிபெற செய்யுங்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment